என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி
- மல்லாங்கிணறு பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள் தலைமை தாங்கினர்.
செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். என்.சி.சி. மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணியுடன், பேரூராட்சி சுகாதார பணியாளர்களும் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
விருதுநகர் -காரியாபட்டி மெயின்ரோட்டில் ஓட்டு மொத்த சுகாதார இயக்கம் சார்பில் தூய்மை பணியில் குப்பைகள் அகற்றப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேருராட்சி கவுன்சிலர்கள் போஸ் என்ற ஜெயசந்திரன், கருப்பையா, சுமதி சந்திரன், பாலசந்திரன், வைஷ்ணவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






