search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehabilitate"

    • அனைத்து வரத்துக்கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
    • ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22-ன் கீழ் தொடர்புடைய துறைகளின் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டப்பணிகள் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்திற்கான ஆண்டு கடன் திட்டமான ரூ.6060.71 கோடியில் விவசாயத்திற்காக ரூ.2765.27 கோடி 45.63 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த அகில உலக இயற்கை வேளாண்மை குறித்த நடைபெற்ற உலக அளவிலான கண்காட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு 2-ம் பரிசை பெற்ற விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கும், வேளாண்மை துறை அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இதே போன்று வேளாண் விற்பனை துறை மற்றும் வணிகத்துறையின் சார்பில் டெல்லியில் நடந்த ஆகார் விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட கவுசிகா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கலந்து கொண்டதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகின்றது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் 2-ம் போக சாகுபடிக்கு 10 இடங்களில் தொடங்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×