என் மலர்
விருதுநகர்
- காரியாபட்டி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்
- மாயமான கணேசனின் மனைவியை தேடி வருகின்றனர்
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள சிம்மாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு திடீரென மாய மாகிவிட்டார். அதுபற்றி கணேசன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான கணேசனின் மனைவியை ேதடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்ைதயை சேர்ந்தவர் முருகேசன் (22). இவர் 3 வருடங்களுக்கு முன்பு கோவையில் வேலை பார்த்தார். அப்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் அவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது குழந்தையுடன் மாமியார் மற்றும் உறவினர்களுடன் சாத்தூர் வந்துள்ளார்.
சாத்தூர் பஸ் நிலையத்தில் குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்பு அவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. அவர் மாயமானது குறித்து முருகேசன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிரத்தினம் (29). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இவரது மனைவி பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்ற காளிரத்தினத்தின் மனைவி மாயமானார். அவர் மாயமானது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
- விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
அருப்புக்கோட்டை
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநார ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு, பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிரம், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜபாளையம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
- அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அய்யன்னாபுரத்தை சேர்ந்தவர் தங்கையா (வயது 85). ஆடு மேய்க்கும் தொ ழிலாளி. வழக்கமாக இவர் ஆடுகளை ஊருக்கு வெளிேய உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.
அப்போது அங்குள்ள என்னீர் என்பவரின் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துவிட்டு வருவார். வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற தங்கையா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி அவரது குடும்பத்தினர் வழக்கமாக மேய்ச்சலுககு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அப்பேது பன்னீரின் தோட்டத்து கிணற்றில் தங்கையா பிணமாக மிதந்தார். கிணற்றில் குளிக்கும்போது வழுக்கி விழுந்து காயம் அடைந்ததில் அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் குருசாமி, கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- செப்டம்பர் மாதம் முழுவதும் ‘போஷன் மா” - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் முழுவதும் 'போஷன் மா" - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து ''போஷன் மா-2022'' நிகழ்வு மற்றும் ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடர்பான பிரசார வாகனத்தை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ரத்தசோகை விழிப்புணர்வுகள் குறித்த நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
பொது மக்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அடைந்து, சத்தான மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோவில் இருக்கிறது.
- கேமராக்கள் மட்டுமின்றி அதில் இருந்த 18 மெமரி கார்டுகள், பேட்டரி உள்ளிட்டவைகளையும் திருடி உள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆற்றில் மழை நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
அங்குள்ள அருவி மற்றும் ஆற்றில் ராஜபாளையம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் நீராட வருகிறார்கள். இந்த பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எப்போதும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
மேலும் இந்த வனப்பகுதியில் புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருக்கும். அதனை கண்காணிப்பதற்காக வனப்பகுதியில் பல இடங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பதிவாகி உள்ள காட்சிகளை தினமும் வனத்துறையினர் ஆய்வு செய்வது வழக்கம். அதேபோல் பார்ப்பதற்காக வன காப்பாளர் சபரி கிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சென்றனர். அப்போது நீராவி பீட் பகுதியில் மரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை காணவில்லை.
அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கேமராக்கள் மட்டுமின்றி அதில் இருந்த 18 மெமரி கார்டுகள், பேட்டரி உள்ளிட்டவைகளையும் திருடி உள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் வன காப்பாளர் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமராக்களை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழக அரசு உத்தரவின்படி 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்து வைக்கும் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடவும், அதன் விவரம் படிவம் 5-ல் வெளிக்காட்டி வைத்தும், பணியாளர்கள் வேலை நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்குமிகாமலும், மிகைநேரம் பணி பார்க்கும் நேரத்தில் வேலை நேரம் 10 சதவீத மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வாரத்தில் மொத்தம் வேலை நேரம் 57 மணி நேரத்திற்கு மிகாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மேற்படி நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் இரவில் பணிபுரிய அவர்களின் சம்மத கடிதம் பெற்றும் அவர்களின்
பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
பெண் பணியாளரிடம் இருந்து பெறப்படும் புகார்களை விசாரணை செய்ய உள்ள விசாரணை கமிட்டி அமைத் தும் அவர்களை வேலை முடிந்தவுடன் வீட்டில் இறக்கிவிட போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். அனுமதி இல்லை அனைத்து பணியாளர்க ளின் ஊதியம் மற்றும் மிகை ஊதியம் அனைத்தும் வங்கியில் மட்டுமே செலுத்தவேண் டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் பின்பற்றாத 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் வாரத்தில் அனைத்து நாட் களும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மீது 1947-ம் வருட கடைகள் நிறுவனச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- புதிய பஸ் நிலையத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டையில் நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகரசபை கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் பொறியாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் 36 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. கவுன்சிலர் முருகானந்தம் திருச்சுழி சாலை மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். கவுன்சிலர் அப்துல் ரகுமான் பேசுகையில், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு காயிதே மில்லத் அல்லது அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதன் பிறகு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்து தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- விருதுநகரில் பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- இந்த சம்பவங்கள் குறித்து வண்ணம்பட்டி, கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 2 மகள்கள் உள்ள னர். மூத்த மகள் அபிராமி (வயது 20). சிவகாசி கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.
சம்பவத்தன்று முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து திரும்பி வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் வெளியே ஒரு கடிதம் இருந்தது. அதில் அவரது மூத்த மகள் அபிராமி வீட்டின் சாவி தங்கையிடம் இருப்பதாக எழுதி இருந்தார்.
பள்ளியில் இருந்த இளைய மகளிடம் சாவியை வாங்கி வீட்டை முத்துக்குமார் திறந்தார். அப்போது டி.வி.யின் மேல் மற்றொரு கடிதம் இருந்தது. அதில் கூறியிருந்தபடி இளைய மகள் செல்போன் வாட்ஸ்-அப்பில் பார்த்தபோது தான் ஒருவருடன் சென்று விட்டதாக அபிராமி கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அபிராமியை பல இடங்களில் தேடினார். இந்நிலையில் நள்ளிரவில் போனில் பேசிய அபிராமி, தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
தனது மகள் மாயமானது குறித்து வண்ணம்பட்டி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அபிராமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 22). சிவகாசியில் உள்ள தனி யார் கல்லூரியில் எம்.ஏ. படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கிவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தனது மகள் மாயமானது குறித்து ஆமத்தூர் போலீஸ் நிலை யத்தில் காளீஸ்வரி புகார் செய்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரது 17 வயது மகள் ராஜபாளையம் அருேக உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமா னார்.
தனது மகள் மாயமானது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் தாய் பரமேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செய்திருந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, மன்ற தலைவரும் சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 35-வது விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. 5 தினங்கள் நடந்த விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், நடந்தன. தினமும் 3 வேளை அன்னதானமும் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில் மும்பையில் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட மும்பை சித்தி கணபதி, வல்லப கணபதி, சுபக்ருது கணபதி, ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், தென்காசி சாலை, காந்தி கலை மன்றம் விலக்கு, சொக்கர் கோவில், திருவனந்தபுரம் தெரு, சங்கரன் கோவில் விலக்கு வழியாக ஐ.என்.டி.யு.சி. நகர் எதிரே உள்ள புதியாதியார்குளத்தில் அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வர் முகேஷ் ஜெயக்குமார், டி.எஸ்.பிக்கள் பிரீத்தி(ராஜபாளையம்), சபரிநாதன் (வில்லிபுத்தூர்), பாபு பிரசாத் (சிவகாசி) தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது.
- நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதிசெல்வன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராதா, செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.
முதன்மை செயல் அதிகாரி அரவிந்த், முதல்வர் அனுசுயா, துணைமுதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா வரவேற்றார். நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள், நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். நீரின் அவசியம் குறித்து கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் மில் தொழிலாளி பலியானார்.
- வெள்ள பெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சுப்பா ராஜா மடம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 45). மில் தொழிலாளி. பாப்பு ராஜா தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). பாலாஜியும், வெங்கடேசும் நண்பர்கள் ஆவர்.
மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் மழை பெய்ததால் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கை பார்ப்பதற்காக நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கி ளில் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை பாலாஜி ஓட்டினார். வெங்கடேஷ் பின்னால் அமர்ந்து சென்றார். முடங்கியாறு ரோட்டில் ராஜூக்கள் கல்லூரி அருகே சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது.
இதனால் பாலாஜியும், வெங்கடேசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார்.
வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






