என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்
  X

  ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  • செப்டம்பர் மாதம் முழுவதும் ‘போஷன் மா” - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் முழுவதும் 'போஷன் மா" - தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட உள்ளது.

  இதைத்தொடர்ந்து ''போஷன் மா-2022'' நிகழ்வு மற்றும் ரத்த சோகையை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு இயக்கம் தொடர்பான பிரசார வாகனத்தை கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  இந்த வாகனம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாதங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்களுக்கு ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ், ரத்தசோகை விழிப்புணர்வுகள் குறித்த நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

  பொது மக்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அடைந்து, சத்தான மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

  இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

  Next Story
  ×