என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதி க்கப்பட்டு உயிரிழந்த சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி கல்பனாவுக்கு சமையலர் பணிக்கான ஆணையையும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையையும், உயிரிழந்தவரின் தாயாருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீ மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கான ஆணை யையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட பிற்படு த்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5478 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும்

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது.
    • இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த மாணவர் விளக்க காட்சியை ஏற்பாடு செய்தது.

    இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்களின் பகுப்பாய்வுத் திறனை தூண்டுவதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட் சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் நாட்டின் விரைவான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது என்றார்.

    துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். மத்திய பட்ஜெட் குறித்து 22 மாணவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உதவிப் பேராசிரியை விண்ணரசி ரெக்ஸ் வரவேற்றார்.

    உதவிப் பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் ஜேஸ்மின் பாஸ்டினா செய்தி ருந்தார். இந்த திட்டத்தின் மூலம் 98 மாணவர்கள் பயனடைந்தனர்.

    • பி.எஸ்.ஆர். கல்லூரி என்.சி.சி. மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    டெல்லியில் 75-வது இந்திய குடியரசு தின விழா முகாம் நடந்தது. இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் துறையை சேர்ந்த என்.சி.சி. மாணவரும், சீனியர் அண்டா் ஆபீசருமான ஆர்.சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் 2-ம் பரிசுகளை வென்றார்.

    ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நடந்த இந்த முகாமில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்த முகாமின் போது நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பாட்டுப் போட்டியில் முதல்பரிசும், நடனப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் பரிசும் பெற்றார்.

    நிறைவுவிழாவில் பிரதமர் மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த முகாமின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் என்.சி.சி. தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால்சிங், மேஜர் ஜெனரல் ஷெராவத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று, 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் சார்பில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    வெற்றி பெற்ற மாணவரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் மாதவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் "ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தல்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு சிறப்பொழிவு நடந்தது.

    இளநிலை வணிகவியல் துறைத் தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவரும், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் தலைவருமான கைலாஷ் ராஜ் அறிமுக உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகராட்சியின் தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் சூர்யாகுமார் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடு, சுற்றுசுழல் மாசுபாடு. கடல்வாழ் மற்றும் நிலவாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றியும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் மனித உடலில் ஏற்படும் புதிய நோய்கள் பற்றியும் எடுத்து ரைத்தார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 229 இளநிலை வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
    • மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையினர், ''பதின்ம வயதினருக்கான இடர்பாடுகளும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தினர். கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் நிகழ்வின் புரவலர்களாக வழி நடத்தினர். முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி வரவேற்றார்.

    தமிழ்த்துறைப்பேராசிரியர் கவிதா, முதல் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் முனியம்மாளை அறிமுகப்படுத்தினார். அவர் ''மகளிருக்கான சட்டங்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.

    தமிழ்த்துறைப்பே ராசிரியர் பத்மபிரியா, 2-ம் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரக வணிக மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அவர் ''உள்ளங்கையில் வாழ்க்கை'' என்ற தலைப்பில் பேசினார். 3-ம் அமர்வில் சிவகாசி, ஹனுமந்தா அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவர் பைரவனை தமிழ்த்துறைப்பேராசிரியர் தனலட்சுமி அறிமுகப்ப டுத்தினார்.

    அவர் "உடல்நலமும் மனநலமும்'' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி நன்றி கூறினார். இதில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த 17 பேராசிரியர்கள், அனைத்துத்துறையைச் சேர்ந்த மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    • இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.
    • வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி முருகேஸ்வரி(வயது 50). இவர்களது மகன் ரவி. இவர் சிவகாசி மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரவி திடீரென இறந்தார். அவரது வேலை கருணை அடிப்படையில் வாரிசுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரதிதேவி தனது கணவரின் வேலையை தனக்கு வழங்க வாரிசு சான்றிதழில் கையொப்பமிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு முருகேஸ்வரி மறுத்துவிட்டார்.தனது மகனின் வாரிசு வேலையை பேரனுக்கு வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் ரதிலட்சுமிக்கும், மாமியார் முருகேஸ்வரிக்கும் சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் பங்கேற்று வாரிசு வேலை தொடர்பாக கடுமையாக பேசினாராம்.

    இன்று காலையும் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள முனியப்பன் என்பவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன் தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். அப்போது அருகில் இருந்த முனியப்பனின் மனைவி தமயந்தி கருப்பாயி(60) தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் 2 பேரும் ரத்த வௌ்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமைறைவான காளிராஜனை தேடி வருகின்றனர்.

    வாரிசு வேலைக்காக 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
    • இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள்.

    சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.

    மகா சிவராத்திரி முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது. மேலும் மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே வருகிற 18-ந் தேதி பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏற இரவிலும் அனுமதிக்க வேண்டும். சிவராத்திரி என்பதால் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் மற்றும் சத்திரிய பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கி, ஜனவரி 29-ந் தேதி வரை 17 ஆயிரத்து 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகளை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், அதைதொடர்ந்து சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மாணவி களுக்கான கையுந்து பந்து போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விளையாட்டின் முக்கியத்துவம், விளையாடுவதனால் என்ன பயன்? என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.

    இதில் பங்கேற்பதே முதல் வெற்றி என்றும், இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை கலெக்டர் தெரிவித்தார்.

    கபடி போட்டிகளில் 42 பள்ளி மாணவர் அணிகளும், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளில் 12 அணிகளும் பங்கேற்றன. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவார்கள்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நண்பர்களுடன் சென்ற நிதி நிறுவன அதிபரை தாக்கி வழிப்பறி செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலராஜேஷ் (வயது33). இவர் ஜவஹர் மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நண்பர்கள் வருண் சுக்ரீத், அபி ஆகியோருடன் சாய்பாபா கோவில் அருகே உள்ள நண்பரின் தோப்புக்கு காரில் சென்றார். சோமையாபுரம் சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் காரை வழிமறித்து சேதப்படுத்தி பாலராஜேஷ் மற்றும் நண்பர்களை தாக்கி செல்போனை பறித்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சோமையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா, ராம்குமார், மாரி செல்வம், வைரமுத்து, கபாலி, கோபாலகிருஷ்ணன் என்ற பீமன் என தெரிய வந்தது. அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா 16-ந் ேததி தொடங்குகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரக்குடி கிராமத்தில் முருகைய்யனார் என்ற கரைமேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி உற்சவ திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 22-ந் தேதி வரை நடக்கிறது.

    16-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா ெதாடங்குகிறது. 17-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    18-ந்ேததி மகா சிவராத்திரியையொட்டி மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கணபதி ஹோமம், இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ருத்ரா அபிஷேகம், 12 மணி முதல் 1.30 மணி வரை சங்காபிஷேகம், 3.30 மணி முதல் 4 மணி வரை பச்சை வாழை பரப்புதல் நிகழ்ச்சி, அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை வள்ளி, தெய்வானை, கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    19-ந்தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு அபிேஷகம், 10.30 மணி முதல் 12 மணி வரை பொங்கல் வைத்தல், இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை சுவாமி வீதி உலா வருதல், சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை பால் பொங்கல் வைத்தல், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 10 மணிக்கு வில்லூர் எண்ணெய் காப்பு எடுக்கும் நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம், இரவு 11 மணி முதல் 12 மணி வரை எண்ணெய் காப்பு அலங்காரம், நள்ளிரவு 1.30 மணி முதல் 3 மணி வரை அர்த்த சாம பூஜை நடக்கிறது.

    22-ந்தேதி மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அபிஷேகம் செய்து உற்சவருக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு விசேஷ அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கீழபட்டியை சேர்ந்தவர் தர்மர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிலா பாரதி (22). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற நிலா பாரதியை குன்னூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (33) என்பவர் கடத்தி சென்று விட்டார். அவர் நிலாபாரதியை துன்புறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த தர்மர் கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துபாண்டியை பிடித்து கைது செய்தனர். நிலாபாரதி மீட்கப்பட்டு அவரிடம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    ×