search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Literary competition"

    • விளையாட்டு, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமையால் பாதி க்கப்பட்டு உயிரிழந்த சிவகாசி வட்டம் கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் செல்வம் என்பவரின் வாரிசுதாரரான அவரது மனைவி கல்பனாவுக்கு சமையலர் பணிக்கான ஆணையையும், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாவையையும், உயிரிழந்தவரின் தாயாருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீ மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி பெறுவதற்கான ஆணை யையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட மாற்றுத்தி றனாளி நலத்துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பராமரிப்புத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் பிரத்தி யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட பிற்படு த்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5478 வீதம் மொத்தம் ரூ.32 ஆயிரத்து 868 மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் மற்றும்

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பேருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
    • தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கில துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்றனர். நாடகம், வினாடி-வினா, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகளில் முதல் பரிசும், தனிமனித நாடகம், சிலை உருவ நாடகம், செய்தித்தாள் உருவாக்கத்தில் 2-வது பரிசும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசும் பெற்றனர். பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்தனர்.

    இதேபோன்று நெல்லை செயின்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் மாணவர்களுக்கான போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று 'வெப் டிசைன்' போட்டியில் 2-ம் பரிசு வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் சாந்தி, வேலாயுதம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த குப்பைகளை மாணவர்கள் அகற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர் வைகுண்டராஜன் நன்றி கூறினார்.

    ×