search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில கலை இலக்கிய போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
    X

    வெற்றி பெற்றவர்களை கல்லூரி முதல்வர் வாழ்த்திய காட்சி

    மாநில கலை இலக்கிய போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை

    • தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.
    • தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆங்கில துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வென்றனர். நாடகம், வினாடி-வினா, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகளில் முதல் பரிசும், தனிமனித நாடகம், சிலை உருவ நாடகம், செய்தித்தாள் உருவாக்கத்தில் 2-வது பரிசும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசும் பெற்றனர். பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2-வது இடம் பிடித்தனர்.

    இதேபோன்று நெல்லை செயின்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் மாணவர்களுக்கான போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று 'வெப் டிசைன்' போட்டியில் 2-ம் பரிசு வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் சாந்தி, வேலாயுதம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலமாக கல்லூரி வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த குப்பைகளை மாணவர்கள் அகற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர் வைகுண்டராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×