என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.