என் மலர்
விருதுநகர்
- நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள பகுதிகளில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முக நாதன் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரவணன் என்பவரது வீட்டில் நாட்டுக்குழல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது. போலீசாரின் விசாரணையில் சரவணன், கூமாபட்டியை சேர்ந்த தனது நண்பர் வனராஜூடன் சேர்ந்து பூப்பாறையை சேர்ந்த விஜேசிடம் துப்பாக்கியை வாங்கியதும், தோட்டாக்களை திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை தோட்டாக்களுடன் பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பலராமன் (வயது50). இவரது மனைவி சியாமளா தேவி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று பலராமன், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் அறையின் கதவை பூட்டிக்கொண்டு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சியாமளா தேவி பந்தல்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன தாயம்மன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது52). அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(55). இவர் தனது 2 மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிக்கப்பட்டது.
- வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது.
கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதுபோன்று இங்கு வந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அதைக்கேட்ட அந்த வாலிபர்கள் கோபமாக அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் 2 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் பெரிய வாளுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உதயகுமாரை நோக்கி வந்தார்.
அவர் உதய குமாரையும், சஞ்சய் பாபுவையும் வாளை திருப்பி வைத்து தாக்கினார். மேலும் இருவரையும் மிரட்டி உதயகுமார் வைத்தி ருந்த வைர மோதிரம், 3½ பவுன் தங்க செயின், வெள்ளி பிரைஸ்லெட், 2 மொபைல்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.
இது குறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த சத்திரப்பட்டி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்படும்.
- தொடர் முயற்சி எடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி வழியாக வெம்பக்கோட்டை வரை செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு அடிக்கடி ரெயில்கள் கடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.
எனவே ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அப்போதைய அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றது.
அப்போது ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கப் பாண்டியன் மேம்பாலத்தை கட்டிமுடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் எடுத்த முயற்சியால் மேம்பால பணிகள் வேகமெடுத்தன. பல இடையூறுகளுக்கு இடையே ராஜபாளையம்-சத்திரப்பட்டி மேம்பால பணிகள் தற்போது 99 சதவீதம் முடிந்ததுள்ளன.
இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் பொது மக்கள் வாகனங்கள் ஓட்டி யும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். புதிய மேம்பா லத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். விரைவில் புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முறையாக திறந்து வைப்பார் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
இந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிகளை முடிக்க தொடரும் முயற்சிகளை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழக அரசால் 1910-ம் ஆண்டில் தோட்டக்கலை சங்கத்திற்கு 23 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நிலம் தனிநபர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை ேமற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டில் 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதியிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலம் அ.தி.மு.க. பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்தார்.
அந்த வகையில் ஆக்கிரமிப்பில் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலங்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் அந்த இடத்தை கையகப்படுத்தி சீல் வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைவேலன் காவடி எடுத்தனர்.
- இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வைகாசி விசா கத்தை குழந்தை வேலன் காவடி நடைபெற்றது. இைத யொட்டி அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பல்வேறு காவடிகள் எடுத்து முத்தாலம்மன் கோவில், முருகன் கோவில், காய்ச்சல் கார அம்மன் கோவில், மாரி யம்மன் ேகாவில், பத்திர காளி அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.
அங்கு மாண வர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடு நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆறுமுகச்சாமி, கதிரேசன், சமுத்திரப்பாண்டியன் ஆகி யோர் செய்திருந்தனர்.
- ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.
- பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 மற்றும் 4-ம் வகுப்பு கற்று தரும் ஆசிரியர்களுக்கு கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் நடராஜ் தலை மையில், மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதனை மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவ னத்தின் முதல்வர் வெள்ளைத்துரை நேரில் பார்வையிட்டார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்தி ருந்தனர். பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் நன்றி கூறினார்.
- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
- ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.
ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மரகதவல்லி கோவிலில் கற்கோவில் கட்டும் பணி தொடங்கியது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள இருள்சிறை கிராமத்தில் மரகதவல்லி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கற்கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க புனித நீருடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பூமிபூஜை விழா நடந்தது. புனித நீரை கற்கோவில் கட்ட இருக்கும் இடத்தில் ஊற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் அமரர் ராமலிங்கம்- சரோஜா தம்பதியினரின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது. முகாமை லயன்ஸ் கிளப் ஆப் ராஜபாளையம் டவுண் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு ராஜபாளையம் டவுண் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்டேன்லி பிரின்ஸ் சித்ரராஜ் தலைமை தாங்கினார். அக்னி என்ற ரவி முன்னிலை வகித்தார். தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட பலர் முகாமில் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ராஜ பாளையம் மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
- ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
- கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






