என் மலர்
வேலூர்
பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வேலூர் ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். #PollachiAbuseCase #PollachiCase
வேலூர்:
திருப்பதி ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சைலஜா, மகள்கள் லிக்கிதா (வயது 12), மகிதா (9) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
7-ம் வகுப்பு படித்து வந்த லிக்கிதாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசமானது. இதனையடுத்து அவரை வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இன்று காலை 8 மணிக்கு லிக்கிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது பெற்றோர் முன் வந்தனர். லிக்கிதாவின் கண்கள், கிட்னி, இதயம் ஆகியவை வேலூர் சி.எம்.சி., சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கு தானமாக பெறப்பட்டது. #tamilnews
திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை சேர்ந்தவர் பஸ்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 25). இந்த தம்பதிக்கு 1 மகன். 1மகள் உள்ளனர்.
இந்நிலையில் பஸ்வராஜ் சுமித்ராவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றும் அவரது தாய் வீட்டில் பணம் வாங்கி வருமாறு தகராறு செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சுமித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுமித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் செய்தனர்.
திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
வேலூர்:
திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் மின்பகிர்மான அலுவலகம் உள்ளது. இந்த மின்பகிர்மான அலுவலகத்தில் இருந்து மின்மாற்றிகள் மூலம் சேர்க்காடு, விண்ணம்பள்ளி, மகிமண்டலம், மிட்டூர் உட்பட 14 கிராமங்களில் மின்விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் சரிவர வழங்கவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
மேலும் பள்ளிகளில் தேர்வு நடந்துவரும் வேளையில் மின்சாரம் இல்லாமல் இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இரவில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் புழுக்கம் காரணமாக கடும் அவதியடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சேர்க்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 10 மணியளவில் மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட அலவலகத்திற்கு சென்று முறையிடுங்கள் என தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இன்ஸ்பெக்டரும் சென்று மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனால் இப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
வேலூர்:
காட்பாடி கிளிதான்பட்டறையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என்று போராட்டம் செய்தனர்.
அப்போது எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். மேலும் கால்நடை மற்றும் பறவையினங்கள் இறக்க கூடும்.எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
அரக்கோணம்:
திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு தினமும் காலை 7 மணிக்கு மின்சார ரெயில் சென்றுவருகிறது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில்நிலையத்திற்கு 7 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இன்று 7 மணிக்கு வழக்கமாக வரவேண்டிய பாசஞ்சர் ரெயில் 7,15 மணிக்கு வந்தது. 15 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றதால் பாசஞ்சர் ரெயிலை மேலும் 30 நிமிடங்கள் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கபட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். நிலைய அதிகாரி மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயணிகள் நாங்கள் தினமும் சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது அடிக்கடி ரெயில்தாமதமாக செல்கிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே ரெயில் காலதாமதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள் ரெயில்காலதாமதத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறோம். இனி இது போல் காலதாமதம் நடக்காது என்று உறிதியளித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி அடுத்த பெத்துறை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 65). அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிந்தராஜியிடம் இருந்து மளிகை கடையை மகன்கள் அபகரித்து கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கோவிந்தராஜிக்கு காலில் காயம் ஏற்பட்டதால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை வாணியம்பாடி ரெயில் நிலையம் செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட பயணிகள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிந்தராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ரகசிய பேச்சு வெளியானதால தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தன்னை தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணி சம்பந்தமாக பேசினர். ஆனால் தி.மு.க.வில் சீட் இல்லை என கூறியதாக பேட்டியளித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சுதீஷ், துரைமுருகனை தே.மு.தி.க. நிர்வாகிகள் தனிப்பட்ட காரணத்துக்காக மட்டும் சந்தித்தனர். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார். மேலும் துரைமுருகன் அவரது கட்சி குறித்தும், தலைமை பற்றியும் கூறியதை நான் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றார்.
இதற்கு பதிலடியாக துரைமுருகன் அளித்த பேட்டியில் சுதீஷ் மீது வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார். தே.மு.தி.க.வினர் பாவம் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் கருத்துக்கூறி அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்றார். இதனால் துரைமுருகன் மீது தே.மு.தி.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காட்பாடியில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள ஓடைபிள்ளையார் கோவில் அருகில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பிரதாப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
துரைமுருகனுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது தி.மு.க.வினர் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தே.மு.தி.க.வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தே.மு.தி.க.வினர் போலீசாரிடையே வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் தே.மு.தி.க.வினரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் காட்பாடியில் பதட்டம் ஏற்பட்டது. துரைமுருகன் வீடு, சித்தூர் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்த தி.மு.க.வினர் ஏராளமானோர் துரைமுருகன் வீட்டின் அருகே குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #DMDK #DuraiMurugan
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கோடையில் வெயில் கொளுத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஆனால் 3-வது வாரத்தில் இருந்து வெயில் அடிக்க தொடங்கியது. 95 டிகிரி அளவிற்கு வெயில் அடித்தது. 100 டிகிரியை தொடாமல் இருந்தது.
மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் அளவு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 98 டிகிரியை வெயில் கடந்து மக்களை வாட்டி எடுத்தது. நேற்று இந்த ஆண்டின் தொடக்கமாக சதத்தை கடந்து 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
வழக்கத்துக்கு மாறாக நேற்று காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்ததால் பகலில் அனல் காற்று வீசியது. வெளியே மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இரவிலும் அனல் தெறித்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர்.
இன்று காலையிலேயே வெயில் வாட்டத் தொடங்கியுள்ளது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க வெயில் சுட்டெரித்தது. கோடை வெயிலை தணிக்க இளநீர், தர்பூசணி, குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இப்போதே வெயில் இப்படி கொளுத்தினால் இன்னும் ஏப்ரல், மே மாதங்களில், அக்னி நட்சத்திர காலங்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதிதான் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதற்கு 40 நாட்களுக்கு முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் டவுன் சோளிங்கர் சாலையில் உள்ள குமினிபேட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. விற்பனையாளர் ரமேஷ் நேற்று இரவு மதுவிற்ற பணத்தை அங்குள்ள மேஜையில் வைத்து விட்டு பூட்டி சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், ஏட்டு சதீஷ் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டனர். இது பற்றி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் சேகரிக்கபட்டன. கடையில் பணம் மட்டும் திருடபட்டுள்ளது. மது பாட்டில்கள் அப்படியே இருந்தன. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மனைவி மகேஸ்வரி (43), மகன் விமல் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டனர். நேற்று இரவு கேரளாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்தில் ஏறினர்.
முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணிக்கு காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் என்ற இடத்தில் சிக்னலுக்காக ரெயில் நின்றது.
அப்போது மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த மகேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்தனர். திடுக்கிட்டு கண்விழித்த மகேஸ்வரி கூச்சலிட்டார்.
பயணிகள் கொள்ளையர்களை விரட்டினர். அதற்குள் செயினை பறித்த கொள்ளையர்கள் ரெயில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
காட்பாடி வந்ததும் ரெயில்வே போலீசில் மகேஸ்வரியின் மகன் விமல் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது.
இதையடுத்து புகார் மனு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார்.
சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் உண்டியல் மூலம் சேமித்த பணம் மற்றும் பெற்றோர் அளித்த நிதியுதவியுடன், தான் படித்த நகராட்சி பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ‘ஸ்மார்ட்’ போர்டு ஒன்றை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு நன்கொடையாக அகல்யா வழங்கினார்.
அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.சத்தியகுமார், ஆசிரியர்கள் அமர்நாத், சரவணன், ஜெயசீலன், சரண்யா, சங்கீதா, ஜெயபாரதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். ‘ஸ்மார்ட்’ போர்டை மாணவி அகல்யா மற்றும் அவரது பெற்றோர் தண்டபாணி- தாமரைசெல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து ‘ஸ்மார்ட்’ போர்டு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.
தான் சேமித்த உண்டியல் பணம் மற்றும் பெற்றோர் உதவியுடன் ‘ஸ்மார்ட்’ போர்டை அவர் படித்த பள்ளிக்கு வாங்கி கொடுத்த மாணவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
ஸ்மார்ட் போர்டு வழங்கியது குறித்து மாணவி கூறியதாவது:-
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட்டு கல்வி கற்று தருகின்றனர்.
இந்த நகராட்சி பள்ளியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் ஏழை மற்றும் அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், இவர்களும் இன்றைய தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய கல்வியை பெற வேண்டும் என நினைத்தேன்.
அதன் காரணமாக என்னிடம் இருந்த சேமிப்பு தொகையான ரூ.50 ஆயிரத்தை செலவிட்டு நான் படித்த இந்த பள்ளிக்கு நவீன தொடுதிரையை வழங்கியதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.






