என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tasmac shop robbery"
தேனி:
தேனி அருகே சின்னமனூர் - சீப்பாலக்கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சின்னமனூர், ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த அழகுமலை (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றுள்ளனர்.
நள்ளிரவு சமயத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வில்லை.
மறுநாள் காலை கடைக்கு வந்த அழகுமலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
திருநின்றவூர்:
திருநின்றவூர் கலர் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சூப்பர் வைசராக திருவள்ளூரை சேர்ந்த ரகுபதி பணியாற்றி வருகிறார்.
மதியம் மதுக்கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் தரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த பணப் பெட்டியை உடைத்து பணத்தை அள்ளிச் சென்று இருந்தனர்.
இது குறித்து திருநின்றவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக மதுக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பக்கவாட்டு சுவரில் மிகப்பெரிய துளை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடைக்குள் துளையிட்டு நுழைந்த கும்பல் 15 மதுபான பாட்டில்களை மட்டும் எடுத்து சென்றது தெரிய வந்தது. ஞாயிற்றுக்கிழமை விற்பனை அதிகமாக இருக்கும்.
அதனை மறுநாள் வங்கியில் கட்டுவதற்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பணியாளர்கள் எடுத்து சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் உள்ளது. நேற்று நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு 36 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
நள்ளிரவில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் டாஸ்மாக் கடையின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் கருப்பையா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
எம்.எம்.சி. காலனி பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் கடையில் 7 மாதத்துக்கு முன்பு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், கண்காணிப்பு கேமிரா ஆகியவை கொள்ளைபோனது.
அதன் பிறகு3 மாதத்துக்கு முன்பு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டிகள் திருடுபோனது. இப்போது 3-வது முறையாக இந்த டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்