என் மலர்
வேலூர்
கே.வி.குப்பம் அருகே பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் தாலுகா நீலகண்டம்பாளையத்தைச் சேர்ந்த சம்பத் (வயது 55) என்பவர் நீலகண்டம்பாளையம் கூட்டு ரோட்டில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை லத்தேரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதேபோல, அணைக்கட்டு தாலுகா கீழ்வெட்டுவாணம் பகுதியைச் சேர்ந்த வெள்ளை என்ற சரண்ராஜ் (30) ரங்கம்பேட்டை கேட் அருகில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் அருகே காக்காதோப்பு மற்றும் உள்ளி கிராமம் அருகே திடீர் சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 47), காக்காதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கிராமத்தில் மின்தடை ஏற்படும் பொழுது, மின்சாரம் பழுது பார்க்கும் பணியில் தொழிலாளி வேல்முருகன் ஈடுபட்டு வந்துள்ளார்.
அடுக்கம்பாறை:
இதைத்தொடர்ந்து வேல்முருகன் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் சப்ளையை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து வேல்முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரை அடுத்த பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் மின்தடை ஏற்படும் பொழுது, மின்சாரம் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று காலை அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் வேல்முருகனிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிராக்டர்கள் மூலம் மணல் கடத்துவதாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
குடியாத்தம்:
அவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்துவதாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 25) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை செய்த சம்பவம் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சிபுரம் வாணியகுளத்தை சேர்ந்தவர் வேலு என்கிற வேல்முருகன் (வயது 28). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதில் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந்தேதி ஜெயிலிலிருந்து பரோலில் சென்றார். நேற்று முன்தினம் காலை அவர் மீண்டும் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து வேலூர் ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆயுள் கைதி வேல்முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேல்முருகன் இன்று காலை அவரது வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் 8 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்தார். பரோலில் வந்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல வேண்டுமே என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை செய்த சம்பவம் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருந்த மொபட் உள்ளிட்ட 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த ஓட்டேரி கூட்ரோட்டில் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த சங்கர் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 19) என்று தெரிய வந்தது. மேலும் அவர் முரண்பாடான தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அதில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (21) ஆகியோர் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருந்த மொபட் உள்ளிட்ட 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

வேலூரில் முன்விரோத தகராறில் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் கலீல் (வயது 27), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளுக்கு அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் மோட்டார் சைக்கிள் சென்றபோது டயரில் இருந்து தெறித்த சேறு, அந்தப்பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருடைய முகத்தில் பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் கலீல் மற்றும் பயாஸ் அவருடைய நண்பர்கள் அப்ரோஸ், அப்துல்லா ஆகியோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கலீல் திடீரென பயாஸை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். முகத்தில் சேற்றை அடித்து விட்டு, அதனை தட்டி கேட்ட தன்னையும் தாக்கிய கலீல் மீது பயாஸ் ஆத்திரம் கொண்டார்.
இதற்கிடைய கலீல் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு முதல்மாடியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்றுவிட்டார். அதே வீட்டின் கீழ்பகுதியில் எலக்ட்ரானிக் கடையில் பணிபுரியும் நகீம் (30) என்பவர் வசித்து வந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளும் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் பயாஸ், அப்ரோஸ், அப்துல்லா ஆகியோர் கலீல் வீட்டின் முன்பு வந்து கலீலை வீட்டை விட்டு வெளியே வரும்படி சத்தம் போட்டனர். அவர்கள் கலீலின் மோட்டார் சைக்கிளை எரிப்பதற்காக கையில் பெட்ரோல் பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.
வெகுநேரமாகியும் கலீல் வீட்டை விட்டு வெளியே வராததால் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலீல் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக நகீமின் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. பின்னர் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதனை கலீல் வீட்டில் எரிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயாஸ் (27), ஆட்டோ டிரைவர் அப்ரோஸ் (24), அப்துல்லா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கலீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பாட்டிலில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும்போது தீ வைத்து அதனை கலீல் வீட்டில் 3 பேரும் எறிந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று தெரிவித்தனர்.
குடியாத்தம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தாமதமானதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனாலும் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் இறந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து சுரேஷ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி தயார் நிலையில் இருந்தது. இருப்பினும் 3 மணி நேரம் ஆகியும் அரசு வழிகாட்டுதலின்படி உடலை அடக்கம் செய்ய அந்த ஊராட்சி செயலாளர், வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அடக்கம் செய்ய வராத அதிகாரிகளை கண்டித்தும் சுரேஷின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் திடீரென குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் கன்னிகாபுரம் கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நெல்லூர்பேட்டை ஊராட்சி செயலாளர் லோகேஷ் உள்ளிட்டோர் உடனடியாக சுரேஷின் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூரில் 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. சேறும், சகதியுமான சாலைகளில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு வரை பெய்தது. இதேபோன்று காட்பாடி, குடியாத்தம், பொன்னை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகவும், சில இடங்களில் லேசாகவும் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வேலூர் நகரில் 2-வது நாளாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சூரியன் தென்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைகோட் அணிந்தபடியும், பொதுமக்கள் குடைபிடித்தப்படி சென்றதையும் காணமுடிந்தது. சாலையோர பள்ளங்கள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வேலூர் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், கழிவுநீர் கால்வாய், காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழையினால் இந்த சாலைகள் சேறும், சகதியுமானது. அதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழும் நிலை காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சாரல் மழை தொடர்ந்து பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
வேலூர்- 31.4, மேல்ஆலத்தூர்- 28.4, காட்பாடி- 23.8, அம்முண்டி சர்க்கரை ஆலை- 23, குடியாத்தம்- 21.4, பொன்னை- 19.2.
கிராம பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகள், காலிமனைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஜூலை முதல் 3 மாதங்கள் மழைக்காலங்கள் என்பதால் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
எனவே மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 60 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பணியாளர்கள் அபேட் கரைசல் ஊற்றுகிறார்கள்.
இதேபோன்று கிராம பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டி, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், உடைந்த மண்பானை, தேங்காய்ஓடு உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கினால் அவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுதல் குறித்து அலட்சியம் காட்டாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்பாடியில் ஊதுபத்தி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
வேலூர்:
காட்பாடி குமரப்பநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே ஊதுபத்தி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஊதுபத்தி நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வேலை முடிந்த பின்னர் தொழிலாளர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஊதுபத்தி நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. அதனால் அங்கிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அப்பகுதிமக்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் காட்பாடி நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் குச்சிகள், மாவு மூட்டை உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டும் இருந்தால் அக்குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயரும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்:
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், குடும்ப நல துணை இயக்குனர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆண்டு தோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலக மக்கள் தொகை சுமார் 790 கோடியாக உள்ளது.
அதில், இந்திய மக்கள் தொகை 139 கோடி. தமிழ்நாட்டில் 7 கோடியே 86 லட்சம் மக்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தற்போது மக்கள் தொகை 15 லட்சத்து 40 ஆயிரமாகும்.
மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, உடை பற்றாக்குறை, இருப்பிட நெருக்கடி, மருத்துவ வசதி, வேலையின்மை, குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. ஆண்கள் 25 வயதுக்கு பின்பும், பெண்கள் 21 வயதுக்கு பின்னரும் திருமணம் செய்து கொண்டு ஒன்று அல்லது 2 குழந்தைகள் என்ற அளவில் குடும்பத்தின் அளவை கட்டுப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கை தரம் உயரும்.
இந்தியாவில் குடும்ப நலத்திட்டத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்கள் தொகை கட்டுப்படுத்த தற்காலிக கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாம்.
மேலும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை என்ற சுமையை குறைக்க ஆண்கள் எளிய முறையில் நவீன குடும்ப நல சிகிச்சையினை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வீடும், நாடும் நலம் பெற சிறு குடும்பம் அமைப்போம்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.