என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குடியாத்தம் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

    டிராக்டர்கள் மூலம் மணல் கடத்துவதாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்துவதாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 25) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×