search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motor Cycle Robbery"

    புதுவை, தமிழகத்தில் கைவரிசை காட்டிய பிரபல மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 17 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பாகூர்:

    கடந்த சில நாட்களாக கிருமாம்பாக்கம், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடனை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரகீம் உத்தரவிட்டார். இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலிஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருடன் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 34) என்பவன் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 17 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட செந்தில் மோட்டார் சைக்கிள் திருடுவதில் கைதேர்ந்தவன் என்பதும், இவன் மீது தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×