என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கே.வி.குப்பம் அருகே பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

    கே.வி.குப்பம் அருகே பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் தாலுகா நீலகண்டம்பாளையத்தைச் சேர்ந்த சம்பத் (வயது 55) என்பவர் நீலகண்டம்பாளையம் கூட்டு ரோட்டில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை லத்தேரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இதேபோல, அணைக்கட்டு தாலுகா கீழ்வெட்டுவாணம் பகுதியைச் சேர்ந்த வெள்ளை என்ற சரண்ராஜ் (30) ரங்கம்பேட்டை கேட் அருகில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×