என் மலர்
திருவண்ணாமலை
இதையொட்டி அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை காந்திநகர் வேட்டவலம் ரோடு சந்திப்பு பகுதியில் எலைட் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை கடை திறப்பதற்காக பூஜை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு வெளிநாட்டு வகை மதுபானங்கள் விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் வேட்டவலம் ரோடு சந்திப்பு பகுதியில் திரண்டு எலைட் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு இது முக்கிய பாதையாகும். மருத்துவமனைக்கும் இந்த வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.
அதனால் இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்றும், டாஸ்மாக் அதிகாரி நேரில் வந்து கடை திறக்ககூடாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.
பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் எலைட் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கும், தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உறவினர் மகனான அருண்குமார் என்பவருக்கும் வரும் 27-ந்தேதி காஞ்சீபுரத்தில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி குழந்தைகள் நலக் குழும அலுவலர் அம்சா, ஆரணி விரிவு அலுவலர் ருக்மணி, ஊர் நல அலுவலர் ஞானம்மாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்த மைனர் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெண்ணுக்கு திருமணம் நடக்கயிருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து மைனர் பெண்ணின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
செங்கம் தாலுகா மேல்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், நேற்று தனது சகோதரி செல்வி (வயது 46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரிய கோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இளங்கோவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள கலர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 28). இவர், நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தாய் மற்றும் 2 சகோதரிகளுடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேன் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு சொந்தமாக பவித்திரம் கிராமத்தில் நிலம் உள்ளதாகவும், அதனை அவர்களது உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், அதனை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க வந்ததாகவும் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் வெறையூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்டவலம்:
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன் (வயது48). விவசாயி. இவருடைய மனைவி ராஜகுமாரி, இவர்களுக்கு ராஜேஷ் கண்ணா, ராகுல் கண்ணா என்ற மகன்கள், சவுந்தர்யா என்ற மகள் உள்ளனர்.
குபேந்திரன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் காலையில் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரைக் காணவில்லை. இதையடுத்து நேற்று மதியம் குபேந்திரனின் மூத்த மகன் ராஜேஷ் கண்ணா தனது தந்தையை காணவில்லை என வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் வழக்கு பதிவு செய்து மாயமான குபேந்திரனை தேடி வந்தனர். குபேந்திரன் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையிலான வீரர்கள் வந்து கிணற்றில் தேடி பார்த்தனர். கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் தண்ணீருக்குள் கேமராவை வைத்து தேடினர். அதில் எதுவும் தெரியாததால் கிணற்றுக்குள் தேடும் முயற்சியைக் கைவிட்டனர்.
இதற்கிடையே குபேந்திரனின் மூத்த மகனான ராஜேஷ் கண்ணாவின் செல்போனுக்கு மாயமான குபேந்திரனின் போனில் இருந்து மர்ம நபர்கள் பேசினர். அதில் உனது தந்தையை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 லட்சம் தர வேண்டும். வெறையூரில் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து பணம் கொடுக்க வேண்டும்.
பணத்தை கொடுப்பதை போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உனது தந்தையை கொன்று விடுவோம் என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கண்ணா இதுகுறித்து வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
வேட்டவலம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் மர்ம நபர்கள் கேட்ட பணத்துடன் ராஜேஷ் கண்ணாவை அழைத்துக் கொண்டு வெறையூர் சென்றனர். இதற்கிடையில் மர்ம நபர்களிடம் இருந்து ராஜேஷ் கண்ணாவிற்கு மீண்டும் அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு விழுப்புரம் வருமாறு கூறி விட்டு போனை துண்டித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் செல்போன் அழைப்பு வந்த இடம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.
இதில் செல்போனில் பேசியது வென்னியந்தல் கிராமத்தை சேர்ந்த பாவாடை பூங்கா (28) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்தவர் என தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாவாடை பூங்காவை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குபேந்திரனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
பாவாடை பூங்கா மற்றும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40), அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (31) ஆகியோர் கடந்த 20-ந்தேதி இரவு குபேந்திரனை மது குடிக்க வருமாறு அழைத்தனர். அவரது விவசாய நிலத்தில் வைத்து மது குடித்தனர்.
அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், பாவாடை பூங்கா 3 பேரும் சேர்ந்து குபேந்திரன் கை கால்களை கட்டி அவருடைய விவசாய கிணற்றுக்குள் வீசினர். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய செல்போனை எடுத்துக் கொண்டு 3 பேரும் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
குபேந்திரனை அவர்களது குடும்பத்தினர் தேடுவது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் பாவாடை பூங்கா பணம் பறிக்க திட்டமிட்டார். குபேந்திரன் செல்போனிலிருந்து ராஜேஷ் கண்ணாவுக்கு போன் செய்து ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.
இந்த தகவலை அறிந்த போலீசார் கிணற்றுக்குள் கிடந்த குபேந்திரன் உடலை இன்று காலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், பாவாடை பூங்கா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 50), திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கிருஷ்ணவேணியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்து இருந்த 12 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை நாவக்கரை வீனஸ் நகரை சேர்ந்த திருநங்கையான ஜீவானந்தம் (57), திருவண்ணாமலை சோமவார குளத்தெரு வ.உ.சி. நகரை சேர்ந்த ஜெய் என்கிற கதிரவன் (42) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து கிருஷ்ணவேணியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி காயத்திரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், திருநங்கை ஜீவானந்தம் மற்றும் கதிரவனுக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனை மற்றும் 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர்களுக்கு தலா ரூ.23 ஆயிரம் அபராதமும், இதனை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஜீவானந்தம், கதிரவன் இருவரையும் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.






