என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

    இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் திருவண்ணாமலை மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×