என் மலர்
திருவள்ளூர்
- தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
- பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார்.
பொன்னேரி:
தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்ததையொட்டி அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடை பெற்றது.
இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார் இதில் கூடுதல் ஆட்சியர், சுபபுத்திரா சப் கலெக்டர் ஐஸ்வர்யா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், முன்னாள் பேரூர் தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அத்திப்பட்டு ஊராட்சியில் சேர்மன் ரவி சிறுளப்பாக்கம் ஊராட்சி பெரிய வெப்பத்தூர் துவக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், வல்லூரில் தலைவர் உஷா ஜெயகுமார், சீமாபுரம் ஊராட்சியில் தலைவர் நர்மதா யோகேஷ் குமார், தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் கலாவதி நாகராஜன், ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
- 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.500 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- திமுக மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வக்கீல் வி.அன்புவாணன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
பெரியபாளையம்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 31,000 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.500 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி என மூன்று தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி, நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வக்கீல் வி.அன்புவாணன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆரணி பேரூர் திமுக அவைத்தலைவர் வக்கீல் ரமேஷ், பொருளாளர் கு.கரிகாலன், துணைச் செயலாளர்கள் கலையரசி, வக்கீல் டி.கோபிநாத், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் அருண்குமார்,பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் கே.சுகுமார், கட்சி நிர்வாகிகள் ஜி.ஆர்.பார்த்திபன், டி.ஜெயக்குமார், புதுநகர் பாலாஜி, ஏ.ஆறுமுகம், சாய்சத்தியம், ஐ.டி.சந்தோஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.கே.சதீஷ், சுபாஷினிரவி, சுகன்யாதினேஷ், பொன்னரசிநிலவழகன், குமார், அருணாநாகராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் வடக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியம், தெற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி, ஆதிதிராவிட நலப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எமிமால்அரசி ஆகியோர் வரவேற்றனர். முடிவில், சத்துணவு திட்ட அலுவலக பார்வையாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
- தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
- இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்த பழைய பேருந்து நிலையம் சுமார் 20 வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சின்னாலம்பாடி பகுதி சேர்ந்த சரசு இவரது மகள் குமாரி மற்றும் 5 மாத குழந்தை புவனேஷ். மற்றும் அவரது உறவுக்கார பெண்ணான சுபத்ரா மற்றும் 9 மாத கைக்குழந்தை தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பொன்னேரி பகுதியில் உடல்நிலை சரியில்லாத காரணத்திற்க்காக தாயத்து கட்டிக்கொண்டு மீண்டும் திருவள்ளூர் பேருந்தும் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு இருக்கும் சிமெண்ட் இருக்கையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அமர்ந்த போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து சரசு, குமாரி. சுபத்திரா ஆகியோர் மீது விழுந்துள்ளது இதில் சரசு கையில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தைகள் புவனேஷ் மற்றும் தக்சன் ஆகியோர் கண்களில் சிமெண்ட் கற்கள் சிதறி விழுந்தன. இதனால் கண் எரிச்சலால் குழந்தைகள் அலறி துடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு ள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்து எந்த நேரத்தி லும் மேற்கூரை பெயர்ந்து விழலாம் என்ற அச்சத்தில் பயணிகள் உறைந்துள்ளனர். எனவே உடனடியாக திருவள்ளூர் நகராட்சியினர் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
- கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர்.
பூந்தமல்லி:
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பாடல் பாடியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக மாவட்ட கலை இலக்கிய மற்றும் பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளருமான அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், அதிமுக சார்பில் மதுரையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். இது திமுகவினருடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ள திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது இவ்வாறு அவதூறான அருவருக்கத்தக்க விதமாக பாடலை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் மீதும் மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய எடப்பாடி பழனிசாமி, மாநாடு பொறுப்பாளர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது பொதுவெளியில் பெண் தலைவரை கொச்சைப்படுத்தியதற்காகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட இவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
- திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:
இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 7.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் - 72 மி.மீட்டர்
ஜமீன் கொரட்டூர் - 67 மி.மீட்டர்
திருவலாங்காடு - 54 மி.மீட்டர்
திருத்தணி - 48 மி.மீட்டர்
பூந்தமல்லி - 41 மி.மீட்டர்
பொன்னேரி - 38 மி.மீட்டர்
சோழவரம் - 36 மி.மீட்டர்
பூண்டி - 35 மி.மீட்டர்
ஆவடி - 32 மி.மீட்டர்
செங்குன்றம் - 30 மி.மீட்டர்
தாமரைப்பாக்கம் - 29 மி.மீட்டர்
கும்மிடிப்பூண்டி - 17 மி.மீட்டர்
ஊத்துக்கோட்டை - 14 மி.மீட்டர்
பள்ளிப்பட்டு - 8 மி.மீட்டர்
ஆர்.கே. பேட்டை - 4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள்.
- போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம்:
புழல் ஜெயலில் வெளிநாடுகளை சேர்ந்த விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுதது 20 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடியாக சென்று புழல் ஜெயிலுக்குள் சோதனை நடத்தினார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர், கொலம்பியாவை சேர்ந்த எட்வின், நைஜீரியாைவ சேர்ந்த டேவிட், அகஸ்டின், எர்ணாவூைர சேர்ந்த ராம்குமார் ஆகியோரை சோதனை போட்டதில் அவர்கள் செல்போன்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
- ஆடித்திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் ரூ.100 தரிசன டிக்கெட்டை போலியாக அச்சடித்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
- கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு ரூ.50, ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்களுக்கு சிலர் போலியாக தரிசன டிக்கெட் வழங்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த பணியாளரான அரியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன், பெரியபாளையம் கலைஞர் நகரைச் சேர்ந்த வினோத், வடமதுரை கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆடித்திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் ரூ.100 தரிசன டிக்கெட்டை போலியாக அச்சடித்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
- மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
திருநின்றவூர்:
போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. காலை 7 மணியளவில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது முன்னதாக முன்னாள் சென்ற மற்றொரு ரெயிலின் என்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
இதில் திருநின்றவூர் ரெயில்வே பாலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவ்வழியே வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.மேலும் சரக்கு ரெயில் ஒன்றும் நிறுத்தப்பட்டது.
கூடுதல் ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை உடனடியாக சரிசெய்தனர். பின்னர் காலை 8.30 மணிக்கு மேல் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. திருவள்ளூர்-சென்ட்ரல் மார்க்கத்தில் வழக்கம்போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.
- கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
ஆவடி:
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ரவுடிகளை கைது செய்யும் தொடர் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன்படி கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 28 பேர், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்கில் ஒருவர், பிடியாணை குற்றவாளி ஒருவர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 பேர் என மொத்தம் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
- நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர்.
- காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் திருமாவளவன் என்பவர் கோவில் திருவிழாவிற்கு வந்து இருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 3 வாலிபர்கள் திருமாவளவனிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியால் வெட்டி பணத்தை பறித்தனர்.
இதில் காயம் அடைந்த திருமாவளவன் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்து போலீஸ்காரர் சரவணன் சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரிக்க வந்தார்.
அவர் கஞ்சா போதையில் நின்ற வாலிபர்களிடம் வழிப்பறி செய்தது குறித்து விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் நடுரோட்டில் போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவரை குத்துவது போல் விரட்டினர்.
கையில் லத்தி இருந்தும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் சரவணன் அவர்களிடம் இருந்து பின்வாங்கினார். உடனே அவரை கத்தியை காட்டி மிரட்டியபடியே போதை வாலிபர்கள் ஓட ஓட விரட்டினர். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஞ்சா போதை வாலிபர்கள் போலீஸ்காரரை நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்தவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கிடையே போலீஸ்காரரை மிரட்டியது தொடர்பாக காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி, சூர்யா, சந்தோஷ் ஆகிய 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் நரிக்குறவர் காலனியில் 83 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடியில் வசித்து வந்த இவர்களுக்கு மாற்று இடமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகத்தூரில் இடம் ஒதுக்கப்பட்டு அதில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் வசித்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு அதிகத்தூரை சேர்ந்த நரிக்குறவர்கள் விண்ணப்பித்த போது இந்த இடம் மேய்ச்சக்கால் புறம்போக்கு நிலம் என்பதால் பட்டா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தனர். மேலும் சிலர் கலெக்டர் அலுவலகம் வெளியே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து நரிக்குறவர்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாதபடி அலுவலக கேட் மூடப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது நரிக்குறவர்கள் சிலர் சூழ்ந்து பட்டாகேட்டு மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும் மணிமாலையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கழுத்தில் அணிவித்து அவரது காலில் விழுந்து கதறினர். அப்போது அதிகத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.
- ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆனால் அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினார். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படாமல் தொடர்ந்து இருந்தது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில், பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கற்குழாய் தெருவிற்கு வந்தனர்.
அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தங்களது வீட்டின் சுவற்றின் மேல் ஏறிநின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
இதகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இன்னும் சில நாட்களில் அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்றனர்.






