search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆரணியில் மூன்று தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்
    X

    ஆரணியில் மூன்று தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

    • 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.500 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • திமுக மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வக்கீல் வி.அன்புவாணன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.

    பெரியபாளையம்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர்

    மு.க.ஸ்டாலின் இன்று காலை நாகை மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 31,000 தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.500 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி என மூன்று தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி, நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வக்கீல் வி.அன்புவாணன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆரணி பேரூர் திமுக அவைத்தலைவர் வக்கீல் ரமேஷ், பொருளாளர் கு.கரிகாலன், துணைச் செயலாளர்கள் கலையரசி, வக்கீல் டி.கோபிநாத், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் அருண்குமார்,பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் கே.சுகுமார், கட்சி நிர்வாகிகள் ஜி.ஆர்.பார்த்திபன், டி.ஜெயக்குமார், புதுநகர் பாலாஜி, ஏ.ஆறுமுகம், சாய்சத்தியம், ஐ.டி.சந்தோஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.கே.சதீஷ், சுபாஷினிரவி, சுகன்யாதினேஷ், பொன்னரசிநிலவழகன், குமார், அருணாநாகராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் வடக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியம், தெற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி, ஆதிதிராவிட நலப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எமிமால்அரசி ஆகியோர் வரவேற்றனர். முடிவில், சத்துணவு திட்ட அலுவலக பார்வையாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    Next Story
    ×