என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திக்குளம் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது47) ஆவார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சுப்பிரமணி நகர் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவருடன் ரவி தனது வீட்டின் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மோகன் ரவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். இதில், மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரவி பரிதாபமாக பலியானார்.

    இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகாமில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 24) என்பவரை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகாமில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 831 மி.கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3182 மி.கனஅடியும் தண்ணீர் இருக்கிறது.
    • கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி (11.7டி.எம்.சி) தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஏரிகளில் 10 ஆயிரத்து 159 மி.கனஅடி (10.1 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 300 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும் வழங்க வேண்டும்.

    ஏற்னவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். அதன்படி கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது குடிநீர் வழங்கும் ஏரிகளில் கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு குறைவு என்றாலும் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் கண்டலேறு அணையிலும் அதிகமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2571 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 3072 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இதேபோல் சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 831 மி.கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3182 மி.கனஅடியும் தண்ணீர் இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பூட்டை உடைத்து ஒன்றரை சவரன் தாலி-ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ தரணீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இதன் அருகே பொன்னியம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளது. இக்கோவில்களுக்கு அருகே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,முக்கரம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மாம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில், இக்கோவில்களின் அர்ச்சகர்கள் நேற்று இரவு கோவில்களை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பூஜை செய்ய கோவிலுக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத தரணீஸ்வரர் திருக்கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி மற்றும் பொன்னியம்மன் கோவிலிலிருந்த உண்டியல், ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.30,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயின் நிலத்தில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு வைத்திருந்த சுமார் 35 லிட்டர் டீசலை கீழே கொட்டி விட்டு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகளை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றில் கிராம மக்கள் மற்றும் விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
    • ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    செங்குன்றம்:

    சென்னை புழல், ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் மற்றும் பெண்கள் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறையில் கைதிகளுக்கு செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.

    அதிகாரிகள் அவ்வப்போது ஜெயிலில் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புழல் சிறையில் பெண் கைதிகள், ஆண் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறைத் துறை கண்காணிப்பாளர் தர்மராஜூக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி நேற்று இரவு பெண்கள் சிறையிலும், ஆண்கள் சிறையிலும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.

    இதில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கொடுங்கையூரை சேர்ந்த தாரணி என்ற பெண்ணிடம் செல்போன் இருப்பது தெரிய வந்தது.

    இதேபோல் ஆண்கள் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள பரத் , விஷ்வா ஆகியோர் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது. அவர்கள் யார்? யாரிடம் பேசினார்கள்? ஜெயில் ஊழியர்கள் உடந்தையாக இருந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    • வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னனிடம் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பெண்கள் மீண்டும் மனு கொடுத்தனர்.
    • ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய குமரன் காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னனிடம் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மீண்டும் மனு கொடுத்தனர்.

    இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    திருத்தணி:

    ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய குழு தலைவர் பயன்படுத்தி வந்த அரசு ஜீப் பழுதானதால், அவர் கடந்த இரண்டு மாதங்களாக பயன்படுத்திய வாடகை காருக்கு ரூ.71 ஆயிரம் பொது நிதியில் இருந்து வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாவட்ட கலெக்டரின் எந்தவித அனுமதியும் பெறாமல் தீர்மானம் கொண்டு வந்ததற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க,-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. தி.மு.க. ஒன்றிய தலைவருக்கு எதிராக அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர்களும் செயல்பட்டதால் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முகாமில் 133 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
    • வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறி நோயினை தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு,பொன்னேரி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா தலைமை தாங்கினார். ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் வக்கீல் சுகுமார், நியமன குழு உறுப்பினர் டி.கண்ணதாசன், ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில்,133 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர்,பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வெறி நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அப்பொழுது பேசிய டாக்டர்கள் மெய்ஞான சுந்தரி, கிரிதரன், சோபனா, சித்ரா ஆகியோர் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினர். மேலும், வெறி நோய் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினர். முன்னதாக அனைவரையும் கால்நடை ஆய்வாளர்கள் கீதா, பிரபாவதி ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தனசேகர், பசுபதி, ஆறுமுகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில், செல்வி நன்றி கூறினார்.

    • சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர்.
    • சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால் ஆவார். இவரது மகன் சரண்குமார்(வயது10). இச்சிறுவன் கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் அருகே சிறுவன் சரண்குமார் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சரண்குமார் மயக்கமாக உள்ளது என தனது பெற்றோரிடம் கூறினான். உடனடியாக பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சரண்குமாரை பாம்பு கடித்ததால் பலியானதாக டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 3.2 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் உள்ள ஏரியில் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • பூண்டி ஏரிக்கரையோர பகுதியில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. 8458 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதல் 3,231 மில்லியன் கன அடி(3.2 டி.எம்.சி.) தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டினாள் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது ஒரு லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை அதிக அளவில் பெய்ததால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்தது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து. அதன்படி பூண்டி ஏரியின் உயரத்தை மேலும் 2 அடி உயரம் உயர்த்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது 3.2 டிஎம்.சி தண்ணீர் சேமித்து வைக்கக் கூடிய வகையில் உள்ள ஏரியில் மேலும் 1.5 டிஎம்சி நீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி பூண்டி ஏரிக்கரையோர பகுதியில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக வேலூர் நீர்வளத்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் குமரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் வாசிலிங்கம், உதவி பொறியாளர் கலையரசி மற்றும் சென்னை, தரமணி மண் தன்மை ஆராய்ச்சியாளர்கள் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றி 6 இடங்களில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து மண் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சதுரங்கபேட்டை கிராமத்தில் பூண்டி ஏரிக்கரை அருகே எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் இருந்து மணல் எடுக்கப்பட்டது. இதனை பரிசோதனைக்காக அனுப்ப உள்ளனர். இதன் அறிக்கையை வைத்து பூண்டி ஏரியின் உயரத்தை எவ்வளவு உயரம் உயர்த்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் ஏராளமானோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யாவை சந்திக்க சென்றனர்.
    • ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் உள்ள ஏரி நீரை பயன்படுத்தி பாசனம் செய்யும் 121 விவசாயிகள் சங்கங்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி நிறைவடைந்தது. அன்றைய தினமே, வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மனுக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில், விளைநில பட்டா அல்லாதவர்கள், மற்றும் இறந்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து முறையிடுவதற்காக விவசாயிகள் ஏராளமானோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்பு ஆட்சியர் ஐஸ்வர்யாவை சந்திக்க சென்றனர். அப்போது அவர் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் செல்வகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தார்.

    ×