வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com