என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை வசதி கேட்டு சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
    X

    சாலை வசதி கேட்டு சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

    • வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னனிடம் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பெண்கள் மீண்டும் மனு கொடுத்தனர்.
    • ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய குமரன் காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்தமன்னனிடம் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மீண்டும் மனு கொடுத்தனர்.

    இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×