என் மலர்
திருப்பூர்
- அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
- பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையமாக உடுமலை பகுதி அமைந்துள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் வனப்பகுதிகள் என ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக உள்ளது.
ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெயரளவிற்கு மட்டுமே சுற்றுலா மையமாக உள்ளது. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமராவதி மலைத்தொடர்கள், படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.
ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் அணையின் கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமையான பூங்கா அமைந்திருந்தது.இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடை பாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
அதே போல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.மேலும் பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் இருந்தன.
சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்தாலும் அணை பூங்காவை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட் புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதே போல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது.அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை.அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணை பூங்காவை புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக உள்ள நிலையில் இதனை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு வகையான மற்றும் வடிவங்களிலுள்ள கள்ளி செடிகள் இங்கு அமைக்கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழகாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந்தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பராமரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது.
- பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது.
- இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கணபதிநகரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட பாறைக்குழி உள்ளது. அங்கு திருமுருன்பூண்டி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாறைக்குழி ஆழமாக இருந்ததால் பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இரவு 11 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று 2-வது நாளாகவும் குப்பைகள் பற்றி எரிகின்றன. இதையடுத்து அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- பணியிட மாற்றத்திற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் ஆதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) இருந்த சரவணன் ஊத்துக்குளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த பானுமதி மடத்துக்குளம் தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல (நில எடுப்பு) தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் தமிழ்நாடு வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் 5 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவசுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த தமிழேஸ்வரன் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த புஷ்பராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 துணை தாசில்தாராகவும், சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
- ரெயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.
திருப்பூர்:
பயணிகளின் நெரிசலை தடுக்க சம்பல்பூர் (ஒடிசா) -ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ெரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ெரயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.ெரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை காலை 10:55 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 7:50 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றடையும். ெரயில் எண்: 08312 ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். ெரயில் எண்: (08311) சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் வியாழன் அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6:42 மணிக்கு வந்து 6:45க்கு புறப்படும். ெரயில் எண் (08312) ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் வெள்ளி அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2:47 மணிக்கு வந்து 2:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உடுமலை:
கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போன்று ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பானதாகும்.அன்னாபிஷேகத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வதால் பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் கிடைப்பதுடன் கடன், வறுமை நீங்கி, பாவங்கள் விலகி செல்வ வளம் சேரும்.இதனால் ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி விழாவுக்கு தயாராகி வருகிறது.
பொதுமக்களும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, பழவகைகள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை கோவில்களுக்கு கொடுத்து வருகின்றனர்.மேலும் நேற்று பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளில் தாமதம் கூடாது. மாதிரி எடுத்த 6 மணி நேரத்துக்குள் முடிவுகளை வழங்கி விட வேண்டும் என ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு தொடர்பவர்கள் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை பணிகளை வேகப்படுத்த வேண்டும். மாதிரி எடுத்த அடுத்த 6 மணி நேரத்துக்குள், நோயாளிக்கு பரிசோதனை விபரங்களை அளித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர் குறித்த விபரங்களை உடனடியாக நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி, மாநகராட்சி நகர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.
உடுமலை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.எம். நகர் பீடரில் உள்ள உயர் மின்னழுத்த மின்பாதைகளில் குறைபாடுகள் சரி செய்யும் வகையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொடக்குபட்டி, பாப்பனூத்து, அமண சமுத்திரம், திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
- பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்
திருப்பூர்:
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிசியோதெரபிஸ்ட்டுகளை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:-
மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறைகளில் பிசியோதெரபி மருத்துவம் முக்கிய பங்காற்றி வருகிறது. இச்சிகிச்சையில் உடலுக்கு வெளியில் பாதிப்பு உள்ள பகுதியில் மட்டும் சிகிச்சை அளிப்பதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை.
ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லை. பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை, இதுவரை நியமிக்கவில்லை.
இதனால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்ட்டுகளே உள்ளனர். இதனால், அனைத்து நோயாளிகளுக்கும், தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக பிசியோதெரபிஸ்ட்டுகளை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும், பயிற்சி பிசியோதெரபிஸ்ட்டுகளை ஊக்க ஊதியத்துடன், தற்காலிகமாக பணியில் அமர்த்த வேண்டும்.ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில், பிசியோதெரபி சிகிச்சையை சேர்க்க வேண்டும். இதன் வாயிலாக ஏழை மக்களுக்கு இச்சிகிச்சை எளிதில் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
- திருமணம் ஆகி பிரீத்தி என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளது
- பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த வெள்ளை கவுண்டன் புதூர் எரிசனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி பிரீத்தி என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
எரிசனம்பாளையம் பாசன வாய்க்கால் அருகே செல்லும் போது திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
- 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் அமைந்துள்ள ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால்,மஞ்சள், இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை,சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.
- இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
- கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் தகர செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த செட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடனே இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கட்டிடப்பணியில் ஈடுபட வந்த பெண்ணா அல்லது மர்மநபர்கள் வேறு எங்காவது இளம்பெண்ணை கற்பழித்து கொன்று இங்கு வந்து போட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரில் மாயமான பெண்களின் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
- ஒட்டுமொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காங்கேயம் வந்தார்.
அப்போது காங்கேயம் பஸ் நிலையம் எதிரே 52 அடி நீளம் உயரமுள்ள கொடி கம்பத்தில்அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
விடியா தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் ஆகின்றன. இந்த 2½ ஆண்டுகளில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி நெசவு, வேளாண் தொழில் நிறைந்த பகுதி. இந்த தொழில் செய்பவர்கள் தி.மு.க. அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை விலை அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்றி கொடுக்கப்பட்டது. மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு 2 லட்சம் பம்பு செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும், வராது என தெரியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். அந்த அளவுக்கு மின் தடை உள்ளது.
அதேபோல் நெசவாளர்கள் துணிக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி, விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் விவசாயம், நெசவு தொழில் தி.மு.க. ஆட்சியில் அழிந்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
எனவே இந்நிலை மாற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு உங்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. நிறுத்தும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






