என் மலர்
திருப்பூர்
- இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
- வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
முத்தூர்:
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதன்படி இப்பகுதிகளில் 10 மாதங்களில் நன்கு வளர்ந்து கூடுதல் பலன் அளிக்கும் வாழை சாகுபடி கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதன்படி இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
இதன்படி வாழை சாகுபடியில் களை மேலாண்மைக்கு புதிய முயற்சியாக எந்திரம் மூலம் களை எடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி மோட்டார் என்ஜின் மூலம் இயங்கும் களை எந்திரம் வாழை சாகுபடியில் வேர்ப்பகுதி, நடுப்பகுதி, இலை பகுதிகளில் எந்த சேதமும் விளைவிக்காமல் முற்றிலும் வளர்ந்துள்ள புல், செடி களைகளை அகற்றி வயலில் உள்ள மண்களில் மேலே தோண்டி கொண்டு வந்து அதே வாழை கன்றுகளை சுற்றிலும் மண்களால் சமன் செய்து விடுகின்றன.
இதன்படி இப்பகுதிகளில் வாழை சாகுபடி மேலாண்மையில் களை எடுக்கும் பணிக்கு எந்திரம் பயன்படுத்தப்படுவது வாழை சாகுபடி விவசாயிகளின் நேரம் மேலாண்மையும், பொருளாதாரம் மேலாண்மையும், கூலியாட்கள் பற்றாக்குறையும் நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
- ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையர் எஸ்.எம்.பாரிஜான், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 89 தீர்மானங்கள் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
துரைசந்திரசேகரன் (தி.மு.க.): எனது வார்டில் சி.எஸ்.ஐ.காம்பவுண்டில் சாக்கடை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைவர் பாப்பு கண்ணன்: நோட்டீஸ் அனுப்பலாம்.
நாகராஜ் (அ.தி.மு.க.): தாராபுரம் நகராட்சி பகுதி ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பதில்லை.மேலும் பஸ் நிலையம் பகுதியில் சாப்பிட்ட பிறகு பில் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது.தலைவர்: இது குறித்து தொழிலாளர் நலன் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படும்.
முருகானந்தம் (தி.மு.க.): பல லட்சம் மதிப்பில் தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் அண்மையில் கட்டப்பட்ட பூங்காவில் செடி கொடிகள் முளைத்து சீர் கெட்டு உள்ளது.மேலும் எனது வார்டில் தெரு ஓரங்களில் மரம் முளைத்துள்ளதால் பள்ளி பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
தலைவர்: நகராட்சி பூங்கா உடனடியாக சீரமைக்கப்படும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது:-
திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52 லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.3.17 கோடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி உருவ சிலையை தாராபுரம் பழைய நகராட்சி பகுதியிலோ அல்லது பெரியார் உருவ சிலை அருகே வைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.
- ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குடிமங்கலம் வட்டார வளமையத்தின் சாா்பில் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.
இதில் உதவி உபகரணங்கள் ஒருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 30 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டைகள், ெரயில் பயண அட்டைகள் 48 பேருக்கும் வழங்கப்பட்டன.
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரி, வட்டார கல்வி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த் ராம்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுமதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி, ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
- அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
- பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.இந்த கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்கின்றனா்.
இது குறித்து எல்.ஆா்.ஜி., கல்லூரி மாணவிகள் கூறியதாவது:-
அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாததால் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
- செங்கப்பள்ளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது 52). இவரது மாமனார் தண்டபாணி (வயது 67). இவர் செங்கப்பள்ளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தண்டபாணி, தனது மோட்டார் சைக்கிளில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணிக்கு தலையில் பலத்த காயம் அடைந்தது. உடனே அப்பகுதியில் உளளவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
- கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2.11.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற் கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
- கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2023-2024ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், செல்வராஜ் எம்.எல்.ஏ., முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி 2022-2023 ம்ஆண்டு முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்தொடர்ச்சியாக 2023 - 2024 ம் கல்வி ஆண்டிலும் கலைத்திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் கலைத்திரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், நவீன கலை வடிவங்கள் என பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்துவதன் வழியாக அவர்களுக்கு கல்வியின் மீதான ஈடுபாட்டையும் வளர்த்தெடுக்க முடியும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கலைத் திருவிழாப் போட்டிகள் 10.10.2023 முதல் 14.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 1,25,613மாணவர்கள் பங்கேற்று 32,860 மாணவர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் 18.10.2023 முதல் 21.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் 22,994 மாணவர்கள் பங்கேற்று 8,877 மாணவர்கள் வெற்றிபெற்றனர். மேலும், கலைத்திருவிழாப்போட்டிகள் மாவட்ட அளவில் ஜெய்வாபாய்மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 28.10.2023 வரை நடைபெறவுள்ளது. இக்கலைத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் 6,801 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதனைத்தொடர்ந்து, மாநில அளவிலான போட்டிகள் 21.11.2023 முதல்24.11.2023 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கட்டுரை, பேச்சு, ஓவியம்,நடனம், இசைக்கருவிகள் இசைத்தல் முதலிய வகைகளில் கீழ்க்கண்ட 3பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 33வகையான போட்டிகள், 9 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 வகையான போட்டிகள் மற்றும் 11 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 82 வகையானபோட்டிகள் நடைபெறுகிறது.கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது. மேலும் கலைத் திருவிழாப் போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பரமணியன், திருப்பூர் மாநகராட்சி4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, கவுன்சிலர் திவாகரன், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது.
- 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
திருப்பூர்:
ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் அன்னாபிேஷகம் நடத்துவது வழக்கம். குறிப்பாக மாலை 6 மணிக்கு, மூலவருக்கு அபிேஷகம் நடத்தி, அன்னத்தால் லிங்கத்திருமேனிக்கு அலங்காரம் செய்து பக்தர் வழிபடுவர்.
வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் பவுர்ணமி நாளில், சந்திரகிரஹணம் ஏற்படுவதால் அன்னாபிேஷக நேரம் மாற்றப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வழக்கமாக மாலை நேரம் நடக்கும் அபிேஷக பூஜை, 28ந் தேதி காலை நேரத்திலேயே நடக்கிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
கிரஹணம் ஏற்படுவதால், கோவில்கள் வழக்கம் போல் மதியம் நடை அடைக்கப்பட்டு, அடுத்த நாள் (29-ந் தேதி) காலை 6 மணிக்கு திறந்து சாந்திபூஜைகள் செய்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சாமளாபுரம் தில்லைநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் மாலை 4 மணிக்கு அபிேஷக பூஜை துவங்குகிறது. மாலை 6 மணிக்குள் அன்னாபிேஷக பூஜைகள் நிறைவு செய்யப்படும். இரவு 7 மணிக்கு, கிரஹணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.
- விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அவிநாசி:
தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட ராஜ ராஜ சோழ மாமன்னனின் 1038 வது ஐப்பசி சதய பெருவிழா அவிநாசி கோவிலில் நடைபெற்றது.அவிநாசியிலுள்ள லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீகருணாம்பிகை அம்மன் கலையரங்கில், ராஜராஜ சோழனின் 1038 சதயப்பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகம் முற்றோதல் செய்யப்பட்டது.
ஓதிய பலனை தரக்கூடிய 25 திருப்பதிகங்கள் கொண்ட தேவார திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல், திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஓதப்பட்டது.
முன்னதாக விநாயகர் பெருமானுக்கும், நால்வர் பெருமக்களுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவிபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.
- விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை தொகுக்கும் வகையில், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும். எமிஸ் புள்ளி விபர அடிப்படையில் தான் ஆசிரியர் காலியிடம் கணக்கிடுதல், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் கொள்முதல் செய்வது, புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் போது ஆகஸ்டு மாதம் இறுதி வரை அட்மிஷன் நடப்பதால், அவ்வப்போது புதிதாக சேரும் மாணவர் விபரங்கள் உள்ளீடு செய்யப்படும். தற்போது விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரின் சுயவிபரங்கள் அனைத்தும், சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எமிஸ் இணையதளத்தில் சர்வர் குளறுபடியால், உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மாதந்தோறும் இப்பணிகள் மேற்கொள்வதால், கற்பித்தலில் ஈடுபட முடியாத சூழல் நீடிக்கிறது. தொழில்நுட்ப குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, அப்டேட் பணிகள் மேற்கொண்டால் மட்டுமே இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றனர்.
- தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
- போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். மாதிரி தேர்வுகளை அதிகம் எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் 7-வது மாடியில் அறை எண்.713-ல் செயல்படும் நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். இங்கு தினமும் 60 பேர் புத்தகங்களை தேர்வு செய்து படித்து தயாராகி வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர், தான் தினமும் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு சென்று போட்டித்தேர்வுக்கு தயாரான அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்தார்.
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தேவையானவற்றை தெரிவித்தால் செய்து கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உடனிருந்தார்.
- தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
- பதவி உயர்வு உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.
திருப்பூர்:
தமிழகத்தில் தாசில்தாராக பணியாற்றிய 22 பேருக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தாராக இருந்த ராஜகோபால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன துணை கலெக்டராகவும் (நிலம் எடுப்பு), திருப்பூரில் தாசில்தாராக இருந்த முத்துராமன் சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயலாளராகவும் (குடியிருப்புகள்), திருப்பூரில் தாசில்தாராக இருந்த கிருஷ்ணவேணி கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் பிறப்பித்துள்ளார்.






