என் மலர்
நீங்கள் தேடியது "Motorcycle - Car"
- செங்கப்பள்ளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது 52). இவரது மாமனார் தண்டபாணி (வயது 67). இவர் செங்கப்பள்ளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தண்டபாணி, தனது மோட்டார் சைக்கிளில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணிக்கு தலையில் பலத்த காயம் அடைந்தது. உடனே அப்பகுதியில் உளளவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






