குடிமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா். ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குடிமங்கலம் வட்டார வளமையத்தின் சாா்பில் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.

இதில் உதவி உபகரணங்கள் ஒருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 30 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டைகள், ெரயில் பயண அட்டைகள் 48 பேருக்கும் வழங்கப்பட்டன.

மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரி, வட்டார கல்வி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த் ராம்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுமதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி, ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். 

X

Maalai Malar
www.maalaimalar.com