search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service Extension"

    • ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
    • ரெயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    திருப்பூர்:

    பயணிகளின் நெரிசலை தடுக்க சம்பல்பூர் (ஒடிசா) -ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ெரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ெரயில் எண்: 08311 சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் நவம்பர் 29-ந் தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.ெரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை காலை 10:55 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 7:50 மணிக்கு ஈரோட்டுக்கு சென்றடையும். ெரயில் எண்: 08312 ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர்ந்து இயக்கப்படும்.

    ஈரோட்டில் இருந்து வெள்ளி மதியம் 1:45 மணிக்கு புறப்பட்டு சனி இரவு 9:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். ெரயில் எண்: (08311) சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் வியாழன் அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 6:42 மணிக்கு வந்து 6:45க்கு புறப்படும். ெரயில் எண் (08312) ஈரோடு - சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ெரயில் வெள்ளி அன்று சேலம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 2:47 மணிக்கு வந்து 2:50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இரு மார்க்கங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1-ந்தேதி முதல் செகந்திராபாத்தில் இருந்து வாரந்தோறும் புதன் கிழமை இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் செல்லும். இது ஜூன் மாதம் 28-ம் தேதி வரை அமலில் இருக்கும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மார்ச் 3-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.50 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் செல்லும். இந்த சேவை ஜூன் மாதம் 30-ந்தேதி வரை அமலில் இருக்கும். மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    ×