என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான நிதி நிறுவன அதிபர்.
வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் திருப்பூர் நிதி நிறுவன உரிமையாளர் பலி
- திருமணம் ஆகி பிரீத்தி என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளது
- பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த வெள்ளை கவுண்டன் புதூர் எரிசனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி பிரீத்தி என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
எரிசனம்பாளையம் பாசன வாய்க்கால் அருகே செல்லும் போது திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






