என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.
    • மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.

    இதன்படி அசிபேட், மோனோ குரோடோபாஸ், குளோரி பைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ், சைபர் மெத்ரின், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை 60 நாட்களுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

    இதேபோல் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடையை மீறி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் நெல்லை மாவட்டத்தில் 39 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 45 செலவில் பூச்சிக்கொல்லி களுக்கு 13 விற்பனை நிலையங்களில் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    வனவிலங்குகள் மின் பாதைகளுக்கு கீழே செல்லும் பொழுது மின்சாரம் தாக்காமல் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பாக கடந்த 27-ந்தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் வன விலங்குகள் செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

    அதன் தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கல்லிடைக் குறிச்சி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அருகில் உள்ள ஸ்ரீ ராமன் குளம் கிராமத்தில் வன விலங்குகள் மின் பாதையை கடக்கும் பொழுது பாதிக்காமல் இருப்பதற்காக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன், உதவி மின் பொறியாளர் குமார் மற்றும் மின் பணியாளர்கள், வனத்துறையின் சார்பாக அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் வித்யா மற்றும் வனப் பணியாளர்களும் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக புதிதாக 30 அடி உயரம் கொண்ட 2 மின்கம்பங்கள் உடனடியாக நடப்பட்டு வனவிலங்குகள் செல்லும் பகுதியில் மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

    • வித்யா பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • நகையை பறித்த அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

     நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் மேல உப்பூரணியை சேர்ந்தவர் துரைமணி. இவரது மனைவி வித்யா(வயது 38). இவர் காமராஜ்நகர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு கடையில் வித்யா இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்டிக்கடையில் பொருட்கள் கேட்டுள்ளார். வித்யா அந்த பொருட்களை எடுத்துக்கொண்டி ருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த நகையை அந்த நபர் பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

    இதுகுறித்து வித்யா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார்.
    • தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிகிறார்.

    வள்ளியூர்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் இன்று ( 31-ந் தேதி ) மாலை 6 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிராகம்பெல் வரவேற்று பேசுகிறார். கூட்டத்தில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ. ராசா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றிகிறார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • அய்யப்பன் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • ஆத்திரம் அடைந்த சிறுவன், அய்யப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

     நெல்லை:

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் துவரை ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 50). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

    அய்யப்பன் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சேது(18), தாழையூத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்பனுக்கும், சேதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சேது வேலையை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சேதுவும், சிறுவனும் அய்யப்பன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 28-ந்தேதி வேலையை முடித்துவிட்டு நிறுவனத்தின் அருகே அய்யப்பனும், 15 வயது சிறுவனும் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது என்னை மதிக்காமல் சேது என்னை பற்றி அவதூறாக பேசிவிட்டான். அவனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சிறுவனிடம் அய்யப்பன் கூறி உள்ளார். இதனை அந்த சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிறுவன், அங்கிருந்த அரிவாளால் அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அய்யப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுவன் மற்றும் அவன் இந்த சம்பவத்தில் ஈடுபட தூண்டுதலாக இருந்த சேது ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

    இதற்கிடையே ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலைவழக்காக மாற்றம் செய்தனர்.

    • உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், குற்றவழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 10-ந் தேதி வரை எழுத்துப்பூர்வமாக தங்களது புகார் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும், சப்-கலெக்டர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, வேதநாராயணன், இசக்கி முத்து, சுபாஷ் உள்ளிட்ட 5 பேர் இன்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து மனித உரிமைகள் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.

    • அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது.
    • சூர்யா தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    உதவி கலெக்டர் முன் ஏற்கனவே லட்சுமிசங்கர், சூர்யா, சுபாஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரிடமும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் நேற்று வெங்கடேஷ் என்ற வாலிபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து விளக்கம் பெற்றார்.

    இதற்கிடையே சூர்யா, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம்.
    • பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

    நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் வரும் எப்ரல் மாதம் 10ம் தேதி வரை புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், ஏப்ரல் 10ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை புகார்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் 4ம் நாளான இன்று மேலும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • வழக்கமாக உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற னர்.

    உண்டியல் எண்ணும் பணி

    நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களை அவ்வப்போது திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த டிசம்பர் 13-ந்தேதி உண்டியல்கள் எண்ணப் பட்டது.

    இந்நிலையில் இன்று கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றினர்.

    கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியா ளர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். வழக்கமாக கோவில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.

    தற்போது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினர் பங்கேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

    • முத்தையா,சின்னத்தாய் இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர்.
    • பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த புளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா, விவசாயி. இவரது மனைவி சின்னத்தாய் (வயது51).

    கொள்ளை

    நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினர்.

    அப்போது அவர்களின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப் பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக புளியம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் நாராயணன் மற்றும் போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

    • சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
    • கழிவு நீர் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக துணை மேயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட 1-வது வார்டு சீனியப்பன் திருத்து பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அப்போது தோண்டிய மணல்கள் கழிவு நீர் ஓடையில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி பொது மக்கள் துணை மேயர் கே.ஆர்.ராஜுக்கு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டு துப்புரவு பணி செய்து உடனடியாக பணியை முடிக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு பணி ஆய்வாளர் ஜானகிராமன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக பணியை தொடங்கி சரி செய்தனர். 

    • குரூப் தேர்வுகளுக்காக பவித்ரா வீட்டில் இருந்து படித்து வந்தார்.
    • பவித்ரா கடந்த 3 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    டவுன் தர்மராஜாகோவில் தெருவை சேர்ந்தவர் ரவிராஜ். இவரது மகள் பவித்ரா(வயது 18) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு குரூப் தேர்வுகளுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தார்.

    தூக்கு போட்டு தற்கொலை

    இந்நிலையில் பவித்ரா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பவித்ராவுக்கு கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×