search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forrest Area"

    • மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    வனவிலங்குகள் மின் பாதைகளுக்கு கீழே செல்லும் பொழுது மின்சாரம் தாக்காமல் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பாக கடந்த 27-ந்தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் வன விலங்குகள் செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின் பாதைகளின் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

    அதன் தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கல்லிடைக் குறிச்சி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அருகில் உள்ள ஸ்ரீ ராமன் குளம் கிராமத்தில் வன விலங்குகள் மின் பாதையை கடக்கும் பொழுது பாதிக்காமல் இருப்பதற்காக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன், உதவி மின் பொறியாளர் குமார் மற்றும் மின் பணியாளர்கள், வனத்துறையின் சார்பாக அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் வித்யா மற்றும் வனப் பணியாளர்களும் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக புதிதாக 30 அடி உயரம் கொண்ட 2 மின்கம்பங்கள் உடனடியாக நடப்பட்டு வனவிலங்குகள் செல்லும் பகுதியில் மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

    ×