என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே விவசாயி வீட்டில் ரூ.1.¼ லட்சம் கொள்ளை
- முத்தையா,சின்னத்தாய் இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர்.
- பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
நெல்லை:
பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த புளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா, விவசாயி. இவரது மனைவி சின்னத்தாய் (வயது51).
கொள்ளை
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினர்.
அப்போது அவர்களின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப் பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக புளியம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் நாராயணன் மற்றும் போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.






