search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை-வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை
    X

    நெல்லை மாவட்டத்தில் 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை-வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை

    • அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.
    • மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 6 வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிகமாக அரசு தடை விதித்துள்ளது.

    இதன்படி அசிபேட், மோனோ குரோடோபாஸ், குளோரி பைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ், சைபர் மெத்ரின், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை 60 நாட்களுக்கு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

    இதேபோல் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடையை மீறி விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் நெல்லை மாவட்டத்தில் 39 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 45 செலவில் பூச்சிக்கொல்லி களுக்கு 13 விற்பனை நிலையங்களில் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×