என் மலர்
திருநெல்வேலி
- மானூர் கானார்பட்டி பகுதியில் நெல்லை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- கானார்பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் டிரைவர், கண்டக்டர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் கானார்பட்டி பகுதியில் நெல்லை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
நெல்லை–-சங்கரன் கோவில் சாலையில் கானார் பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவ தில்லை என கலெக்டர் கார்த்தி கேயனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் கானார் பட்டி பஸ் நிறுத்தத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கானார்பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் டிரைவர், கண்டக்டர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் கானார்பட்டி கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படும் என்றும், எந்தவித புகார்களும் இல்லாமல் கானார் பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்ய வேண்டும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.
- மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் வருகிற 24-ந்தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
- வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மது விலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னீர் பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ள லாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் பெயரை பதிவு செய்யும்போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். ஏலம் எடுத்த வுடன் முழுத் தொகை மற்றும் அரசால் விதிக்கப் படும் ஜி.எஸ்.டி. சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்ற னர்.
இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் இருந்தபோது அதன் முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் என்ற இரண்டு விநாயகர் கோவில் இருந்தது.
பஸ் நிலையத்தை இடிக்கும் போது அப்போ தைய கமிஷனர் மீண்டும் விநாயகர் கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் கடந்த 2021 மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகி யோரிடம் மனு அளிக்கப் பட்டது.
அந்த மனுவில் இடிக்க ப்பட்ட 2 விநாயகர் கோவி லையும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று இந்து முன்னணி நிர்வாகிகள் மேயர் சரவணனிடம் மனு அளித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் வந்த இந்து முன்னணியினர் அளித்த மனுவில், மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பஸ் நிலையம் கட்டும் பணி முடிந்த பிறகு கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் எந்த இடத்தில் கோவில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் 2 விநாயகர் கோவில்களையும் அமைத்து தர வேண்டும். அதற்கு விரைவாக இடத்தை ஒதுக்கீடு செய்து கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதனை வாங்கி படித்து பார்த்த மேயர் சரவணன் இந்து முன்னணி கோரிக்கை கண்டிப்பாக நிறை வேற்றப்படும். பஸ் நிலையம் கட்டி முடிப்பதற்குள் அந்த இடத்தை ஆய்வு செய்து பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் ஆகிய 2 கோவில்களும் கண்டிப் பாக அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
- அப்துல் சமது பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார்.
- அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.
நெல்லை:
நெல்லை டவுன் காந்திமதி தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது60). அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளரான இவர் டவுன் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இதற்காக பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார். அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.
இவர் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே சென்ற போது அப்பகுதியில் திடீரென காரில் வந்த 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்தனர்.
பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு மொபட்டை எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் சமது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசாரி டம் தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.
- தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.
களக்காடு:
மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 71). விவசாயி.
இவருக்கும், இவரது சகோத ரர்களுக்கும் சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னங்கன்று வைத்தனர். தற்போது தென்னை மரம் அமைந்துள்ள இடம் செல்வராஜிக்கு ஒதுக்கப் பட்டு, அவரது பெயரில் பட்டாவும் உள்ளது.
இந்நிலையில் நேற்று செல்வ ராஜின் சகோதரர் சுப்பையா வின் மகன் ராஜகோபால் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்தார். இதைப்பார்த்த செல்வராஜ் தேங்காய்களை பறிப்பதை தட்டிக் கேட்டார். இதில் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த ராஜ கோபால், அவரது தந்தை சுப்பையா, அதே ஊரை சேர்ந்த முத்துக்குட்டி மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கல்லால் தாக்கி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டார். இதுபற்றி செல்வராஜின் மகன் முருகன் (47) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜகோபால், சுப்பையா, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்
- நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
அந்த வகையில் டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
நெல்லை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் டவுண் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படு கிறதா? என ஆய்வு செய்தார்.
மொத்தம் 46 கடைகள் சோதனை செய்ததில் 15 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்ப டுவது கண்டறியப்பட்டு ரூ. 2,600 விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. 8 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வின்போது மேஸ்திரி கள் சிவக்குமார், முருகன், பாலமுருகன், இசக்கி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், மாரியப்பன், சேக் மற்றும் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் வண்ணார் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் வண்ணார் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜாகிர் உசேன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், ஜெய்னுலாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் கவி பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், முகமது அனஸ் ராஜா, கெங்கராஜ், மணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும்.
- குகைகோவிலாக திகழும் இத்தலத்தில் முருகன், சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
வள்ளியூர்:
தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். குகைகோவிலாக திகழும் இத்தலத்தில் முருகன், சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலையில் கொடியேற்றத் துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப் பட்டு பூஜை மற்றும் தீபாரா தனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் இரவு சுவாமி அம்பாளுடன் மயில், அன்னம், கிளி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சி யளிக்கிறார்.
தேரோட்டம்
வருகிற 28-ந்தேதி (வெள்ளிகிழமை) 9-ம் திருவிழாவன்று காலையில் தேரோட்டம் நடை பெறுகிறது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. பின்னர் 9.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளியுடன் தேரில் எழுந்தருளுகிறார்.
10-ம் திருவிழாவன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறு கிறது. இரவு சுவாமி வீதி உலா பக்தர்களுக்கு வந்து காட்சியளிக்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கர் அசோக் குமார், ஆய்வாளர் கோபாலன், கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் ராதா மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
- உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயல்வதாக 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
- தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கடத்த முயல்வதாக கூறி 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் உவரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதையடுத்து லாரியில் இருந்த 37 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த களியக்காவிளை பாடசாலையை சேர்ந்த சரத் (வயது 29), அருண்(36), அரிபிரசாத் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
+4
- நெல்லை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை:
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக் கப்பட்டது.
இதையொட்டி நெல்லை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ்
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் முரளி ராஜா, வக்கீல் காமராஜ், வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மண்டல தலைவர் கெங்கராஜ், ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணைத்தலைவர் அருள்ராஜ் மற்றும பலர் கலந்து கொண்டனர்.
மேயர் சரவணன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகி சரத்மணி மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் தருவை செல்லத்துரை, முத்தூர் நயினார், குன்னத்தூர் நயினார், எல்.எஸ்.லட்சு மணன், அமைப்பு செய லாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்றம் பெரிய பெருமாள், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முக குமார், சக்தி குமார், காந்தி வெங்கடாஜலம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், வக்கீல் ஜெயபாலன், முன்னாள் பகுதி செயலாளர் தச்சை மாதவன், ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராம சுப்பிரமணியம், நிர்வாகிகள் பாறையடி மணி, சீனி முகமதுசேட், அன்பு அங்கப்பன், டால் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தட்சண மாற நாடார் சங்கம்
தட்சண மாற நாடார் சங்கம் தலைமை அலுவல கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார் தலைமையில், பொருளாளர் செல்வராஜ் நாடார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் காமராஜ் நாடார், இசக்கி முத்து என்ற அசோகன் நாடார், நயினார் நாடார், கோல்டன் செல்வராஜ் நாடார், கருணாகரன் நாடார், மும்பை கிளை சங்க செயலாளர் மைக்கிள் ஜார்ஜ் நாடார், நிர்வாக சபை உறுப்பினர் கோபால் ராஜ் நாடார், சங்க மேலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் 3 பேர் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை பார்த்ததும் அவர்கள் அவமரியாதையாக திட்டினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் செல்வம் (வயது20), செல்லத்துரை மகன் வான்மகேஷ் (22), நாங்கு நேரியை சேர்ந்த மனோகரன் மகன் உமாபதி (25). இவர்கள் 3 பேரும் நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில் 3 பேரும் அரிவாள்களை தீட்டிய படி இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்களை அவமரியா தையாக திட்டினர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நிரோஷா வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
- கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் நிரோஷா (வயது20). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான நிரோஷாவை தேடி வருகிறார்.






