என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
    X

    நலத்திட்ட உதவிகளை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கிய போது எடுத்தபடம்.  

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

    • நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் வண்ணார் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் வண்ணார் பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜாகிர் உசேன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், ஜெய்னுலாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் கவி பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், முகமது அனஸ் ராஜா, கெங்கராஜ், மணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×