என் மலர்
நீங்கள் தேடியது "Transport Officials"
- மானூர் கானார்பட்டி பகுதியில் நெல்லை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- கானார்பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் டிரைவர், கண்டக்டர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் கானார்பட்டி பகுதியில் நெல்லை வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
நெல்லை–-சங்கரன் கோவில் சாலையில் கானார் பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவ தில்லை என கலெக்டர் கார்த்தி கேயனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் கானார் பட்டி பஸ் நிறுத்தத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கானார்பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் டிரைவர், கண்டக்டர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் கானார்பட்டி கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படும் என்றும், எந்தவித புகார்களும் இல்லாமல் கானார் பட்டியில் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்ய வேண்டும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.






