என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
- தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும்.
- குகைகோவிலாக திகழும் இத்தலத்தில் முருகன், சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
வள்ளியூர்:
தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். குகைகோவிலாக திகழும் இத்தலத்தில் முருகன், சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகியோருடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
இந்த கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலையில் கொடியேற்றத் துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப் பட்டு பூஜை மற்றும் தீபாரா தனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் இரவு சுவாமி அம்பாளுடன் மயில், அன்னம், கிளி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சி யளிக்கிறார்.
தேரோட்டம்
வருகிற 28-ந்தேதி (வெள்ளிகிழமை) 9-ம் திருவிழாவன்று காலையில் தேரோட்டம் நடை பெறுகிறது. காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. பின்னர் 9.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளியுடன் தேரில் எழுந்தருளுகிறார்.
10-ம் திருவிழாவன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறு கிறது. இரவு சுவாமி வீதி உலா பக்தர்களுக்கு வந்து காட்சியளிக்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கர் அசோக் குமார், ஆய்வாளர் கோபாலன், கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் ராதா மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.






