search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officers check"

    • பிளாஸ்டிக் கவர்கள், காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர
    • அபராதம் விதித்து எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் நகராட்சி ஆணையா ளர் சதீஷ்குமார் தலைமையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில்குமார். சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பஜார் வீதி, முகமது அலி பஜார், ஆத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர்.

    மேலும் கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள், காலாவதி யான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

    பிளாஸ்டிக்கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து மீண்டும் இவற்றை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி, மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் ஆய்வு

    அந்த வகையில் டவுன் மண்டலத்தில் உள்ள கடைகளில் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

    நெல்லை மாசுக்கட்டுப் பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் டவுண் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படு கிறதா? என ஆய்வு செய்தார்.

    மொத்தம் 46 கடைகள் சோதனை செய்ததில் 15 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்ப டுவது கண்டறியப்பட்டு ரூ. 2,600 விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. 8 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆய்வின்போது மேஸ்திரி கள் சிவக்குமார், முருகன், பாலமுருகன், இசக்கி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், மாரியப்பன், சேக் மற்றும் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலாவதியான பொருட்கள் பறிமுதல்
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பார்சம்பேட்டை, சந்தைக்கோடியூர் பகுதியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வேலூர் ஒருங்கிணைந்த நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) வி. செந்தில் குமார், நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் கோடியூர், பார்சம்பேட்டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள் என 16 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது காலாவதியான 3 கிலோ உணவை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு ஹோட்டல்களில் கலர் பவுடர்கள் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளை பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளருக்கு 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கோடியூர் பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் பழைய இறைச்சி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    உணவகம் மற்றும் இறைச்சி கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பழைய உணவு மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவு றுத்தினர். உணவு பாதுகாப்பு சான்று இல்லாத கடைகள் நடத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் மேலும் கடை பதிவு சான்று இல்லாமல் உள்ளவர்கள் உடனடியாக பதிவு சான்று பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    ×