உவரி அருகே ரேஷன் அரிசி கடத்திய கும்பலை மடக்கி பிடித்த பொதுமக்கள்

உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் கேரளாவிற்கு கடத்த முயல்வதாக 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
உவரி அருகே ரேஷன் அரிசி கடத்திய கும்பலை மடக்கி பிடித்த பொதுமக்கள்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உவரியில் இருந்து நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கடத்த முயல்வதாக கூறி 3 பேரை நவ்வலடியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

தகவல் அறிந்து உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா, பறக்கும் படை தாசில்தார் சுப்பு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் உவரியில் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

ரேஷன் அரிசி பறிமுதல்

இதையடுத்து லாரியில் இருந்த 37 மூட்டை ரேஷன் அரிசியை லாரியுடன் போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த களியக்காவிளை பாடசாலையை சேர்ந்த சரத் (வயது 29), அருண்(36), அரிபிரசாத் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com