என் மலர்
திருநெல்வேலி
- தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8,513 பேரும், மாணவிகள் 10,498 பேரும் என மொத்தம் 19,011 பேர் தேர்வு எழுதினர்.
- 8,196 மாணவர்களும், 10,313 மாணவிகளும் என மொத்தம் 18,509 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தமாக 97.36 சதவீதம் ஆகும்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக நெல்லை மாவட்டத்தில் 73 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மாணவர்கள் 9,017 பேரும், மாணவிகள் 10,705 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 8,576 பேர் தேர்ச்சி பெற்றனர். அதே போல் 10,477 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருந்தனர். மொத்தமாக 96.61 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8,513 பேரும், மாணவிகள் 10,498 பேரும் என மொத்தம் 19,011 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,196 மாணவர்களும், 10,313 மாணவிகளும் என மொத்தம் 18,509 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது மொத்தமாக 97.36 சதவீதம் ஆகும்.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 63 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7,643 மாணவர்களும், 9,103 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 7,194 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 94.13 சதவீதம் ஆகும். இதேபோல் மாணவிகள் 8,875 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.50 சதவீதம் ஆகும்.
மொத்தமாக மாவட்டத்தில் 16,746 பேர் தேர்வு எழுதிய நிலையில் 16,069 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.96 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
மொத்தமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- கால்டுவெல் இல்லத்திற்கு அமைச்சர் துரைமுருகன் சென்று பார்வையிட்டார்.
- புதிய பஸ் நிலையம் அருகே அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெல்லை மாநகரத்தில் நடைபெறும் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். இதற்காக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து குமரி மாவட்டத்தில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
திட்டப்பணிகள் ஆய்வு
இன்று காலை அவர் நெல்லை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டார். திசையன்விளை அருகே எம்.எல். தேரி பகுதியில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள கால்டுவெல் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து நாங்குநேரி அருகே பரப்பாடி பகுதியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான மூன்றாம் நிலை பணியினை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப் படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தினர்.
அப்போது அவருடன் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ். ஆர். ஜெகதீஷ், ஒன்றிய செய லாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். அதன் பின்னர் நெல்லை அருகே பொன்னா க்குடி பகுதியில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், ஆவின் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஜான் ரவீந்தர், மாவட்ட துணை செய லாளர் தமயந்தி மற்றும் நிர்வாகிகள் செல்வ கருணாநிதி, சுடலை கண்ணு, ஜார்ஜ் கோசல், ரகுமான் உள்பட கலந்து கொண்டனர்.
உற்சாக வரவேற்பு
அதனைத் தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் செண்டை மேளம் முழங்க நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் விஜிலா சத்தியானந்த், எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளரும், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவருமான சுதா மூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாணவரணி ஆறுமுகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளி கையில் அமைச்சர் துரை முருகன் ஓய்வெ டுத்தார்.
பொதுக்கூட்டம்
இன்று மாலை டவுன் குளப்பிறை தெருவில் நடைபெற உள்ள தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்ட த்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதனை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கோவில் தாமிரபரணி நதிக் கரையில் சிறு குன்றின் கீழ் அமைந்துள்ளது.
- திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி திருக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் தாமிரபரணி நதிக் கரையில் சிறு குன்றின் கீழ் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 3-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாக்களில் காலை திருமஞ்சனம், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜல பதிக்கு கொழு மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடை பெற்றது. தொடர்ந்து கருட வாகனப் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது. கோவில் பிரகாரம் சுற்றி வந்ததும் கருட வாகனத்திற்கு திருக்குடைகள் சாற்றப்பட்டு வீதி புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- ஷாஜகான் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
- அலங்கார விளக்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஷாஜகான் ஈடுபட்டார்.
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 44 ). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று பத்தமடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக அவர் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி இருந்தார். விழா நிறைவையொட்டி இன்று காலை கோவிலில் அமைத்திருந்த அலங்கார விளக்குகளை அப்புற ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
- டாக்டர் ரேவதி ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருது நகர் உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் நோயாளி கள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை திகழ்கிறது.
புதிய டீன் பொறுப்பேற்பு
இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோ யாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கா னோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையின் டீனாக பணியாற்றி வந்த டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து துணை முதல்வரான டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வ ராக பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நி லையில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் ஆக பணியா ற்றிய டாக்டர் ரேவதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் டீனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர். பின்னர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணியா ற்றினார். அங்கிருந்து சிவகங்கைக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது நெல்லைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனியார் நிறுவனம் பொதுவெளியில் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நாம் தமிழர் கட்சி நெல்லை தொகுதி துணைத்தலைவர் மாரி முத்து தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
வேலையில் முன்னுரிமை
கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் பொதுவெளியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவு களை கொட்டி வருகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
கங்கைகொண்டான் ஊராட்சி பகுதியில் நடை பெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளில் கங்கைகொண்டான் உட்பட்ட பகுதிகளை சேர்ந்த படித்த, படிக்காத ஆண், பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கைது
தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கிராமமக்கள் நலன் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகேசன் தலைமையில் கொடுத்த மனுவில், ராதாபுரம், வள்ளியூர் யூனியன் பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை.
நாங்கள் ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் மின் இணைப்புகளை அடிக்கடி துண்டித்து விடுகிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை. எனவே மின்தடையை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
- தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
- லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று டாஸ்மாக் குடோன் முன்பு சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சுமை பணி செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர் மோகன் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். மாவட்ட சுமை பணி தலைவர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 36 டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவே இல்லை. எனவே உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாற்றி ஒரு பெட்டிக்கு ரூ.8 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். குடோன் சுமை பணி தலைவர் முருகன் நன்றி கூறினார்.
- ஆல்பர்ட் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
- ஆற்றில் விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை பேட்டையை அடுத்த கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 35). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் ஆற்று பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். பாலத்தின் மீது அவர் சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். தாமிரபரணி ஆற்றில் தற்போது மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால், விழுந்த ஆல்பர்ட்டுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து வந்து ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி கீழே விழுந்தாரா? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.
- காயமடைந்த மணி சுடலை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மணிசுடலை பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் பஸ் நிலையம் தெருவை சேர்ந்தவர் மணி சுடலை (வயது 60).
இவரது மகள் தனலட்சுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி இறந்துவிட்டார். இதையடுத்து பாலசுப்பிர மணியன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மணிசுடலை தனது 2 பேரக்குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக கடந்த 30-ந்தேதி பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது பாலசுப்பிர மணியனுக்கும், மணி சுடலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியன் கம்பால் மணிசுடலையை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மணி சுடலை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மணிசுடலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மானூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
- தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது வழக்கு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
- 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
- கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது 1-வது அணு உலை மூலம் மட்டும் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் பாலாமடை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சண்முகசிகா (வயது43). இவர் களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 1 ஆண்டுக்கு முன் சண்முகசிகா தச்சநல்லூர் அருகே உள்ள மேலகரையை சேர்ந்த இசக்கியம்மாளிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும், இந்த கடனை அவர் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் களக்காடு வேளாண்மை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சண்முகசிகா கலந்து கொண்டார். உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சண்முகசிகாவை, இசக்கியம்மாளின் மகனான அம்பை ரகுமான் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (36), அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர் காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினர்.
அவர் ஏறமறுத்த போது எனினும் அவரை காரில் ஏற்றி மேலகரைக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து கத்தி முனையில் அவரை பணத்தை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் அவரை விடுவித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரது நண்பர் விக்னேஷை தேடி வருகின்றனர்.






