என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்
- காயமடைந்த மணி சுடலை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மணிசுடலை பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் பஸ் நிலையம் தெருவை சேர்ந்தவர் மணி சுடலை (வயது 60).
இவரது மகள் தனலட்சுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி இறந்துவிட்டார். இதையடுத்து பாலசுப்பிர மணியன் 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மணிசுடலை தனது 2 பேரக்குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக கடந்த 30-ந்தேதி பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது பாலசுப்பிர மணியனுக்கும், மணி சுடலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியன் கம்பால் மணிசுடலையை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த மணி சுடலை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மணிசுடலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மானூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.






