search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்- சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்- சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
    • லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்க்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று டாஸ்மாக் குடோன் முன்பு சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சுமை பணி செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர் மோகன் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். மாவட்ட சுமை பணி தலைவர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 36 டாஸ்மாக் குடோன்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவே இல்லை. எனவே உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லிக்கர் பெட்டி ஒன்றுக்கு ரூ 5.50 காசு வழங்கப்பட்டு வருகிறது. அதனை மாற்றி ஒரு பெட்டிக்கு ரூ.8 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். குடோன் சுமை பணி தலைவர் முருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×