என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது.
    • அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    வள்ளியூர்:

    தமிழர்களின் தொன்மை யான வாழ்வியல் நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறிய செய்யும் வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதி விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பணியை கடந்த 2021-ம் ஆண்டு சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாட்டில் 7இடங்களில் அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. துலுக்கர்பட்டியில் நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வில் செவ் வண்ணம், கருப்பு சிகப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட ஆயிரத்து ஒன்பது அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தது.

    மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளி நாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்து உள்ளது. பின்னர் 2-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள் உள்ளிட்ட 450 அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப்பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தொல்லியல் துறை இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    • வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும்போது, கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கடும் இடி- மின்னல், மழைப்பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என கூறினார்.

    • திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமை தாங்கினார். தொழில் அதிபர் விஜயேஸ்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். மேலும் கல்வி ஊக்க தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது.
    • காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது. அப்போது சூறை காற்றும் வீசியது. காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது. மரத்தில் கிளைகள் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையை அடைத்த படி விழுந்தன. இதனால் நோயாளிகள் சுகாதார நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

    காற்றில் சாய்ந்த மரத்தின் கீழ் நோயாளிகள் சீட்டு பெற்று காத்திருப்பார்கள். மரம் விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பும் நோயாளிகளும், பொதுமக்களும் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். மழை பெய்ய தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர். காற்றில் சாய்ந்த மரம் களக்காடு யூனியனுக்கு சொந்தமானது ஆகும். மரத்தை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார்.
    • நெல்லை எம்.பி.யும், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானதிரவியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பாக ஊரல்வாய்மொழி ஊராட்சியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். நெல்லை எம்.பி.யும், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானதிரவியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வள்ளியூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் முருகேசன், ரேவதி, மாவட்ட பிரதிநிதி மணிவர்ண பெருமாள், கருணாநிதி, இசக்கியப்பன், ஒன்றிய பொருளாளர் அந்தோணி தாமஸ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், பணகுடி பேரூர் செயலாளர் தமிழ்வாணன், வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், பணகுடி பேரூராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி தமிழ்வாணன், துணைத்தலைவர் சகாய புஷ்பராஐ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனையகம் அமைக்கப்படுகிறது.
    • வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

    நெல்லை:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை யகம் அமைக்கப்படுகிறது.

    அடிக்கல் நாட்டு விழா

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடை பெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த னர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சரவ ணக்குமார், உதவி இயக்குனர் புஷ்ரா சற்குணம், உதவி செயற் பொறியாளர் குரு பாக்கியம், இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    ரூ.5 கோடியில்

    பல்வேறு வகையான வண்ண மீன்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி மீன்வளர்ப்பு மற்றும் பொழுது போக்கு அம்சமாக வும், தொழில் ரீதியான வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் இந்த வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை கூடம் அமைக்கப்படுகிறது.

    சுமார் 5 ஆயிரம் சதுரடியில் 2 தளங்களுடன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட மீன் தொட்டி களில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உள்ள மீன் காட்சியகத்தில் சுறா, திருக்கை உள்ளிட்ட 40-க்கும் அதிகமான கடல் மீன்களும், ஆஸ்கர், டிஸ்கஸ் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் வண்ண மீன்களும் காட்சிப்படுத்தப் படும்.

    வெளிநாட்டு தொழில்நுட்பம்

    இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் விழிப்புணர்வுக்காகவும், அலங்கார மீன்கள் சார்ந்த கல்வி அறிவு பெறவும், பொழுது போக்கிற்காகவும் செயல்படுத்த இருக்கிறோம். இது வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு நவீன சுத்திகரிப்பு உபகர ணங்களை பயன்படுத்தி இயக்கப்படும் முதல் அரசு வண்ண மீன் காட்சியகம் ஆகும்.

    மேலும் தனியாக இயங்க கூடிய அவசர மற்றும் மீன் உயிரி காக்கும் கூடமும் இதில் அடங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கால்நடை கல்லூரி

    பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்க ளிடம் கூறும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மீன்வள கல்லூரியும், தென்காசி மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியும் கேட்டு கோரிக்கை வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

    ரூ.52 கோடியில் கூடுதாழை, கூட்டப்பனை யில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

    2-ம் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி யான கொளத்தூர் உள்ளது. விரைவில் இதனை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும்.

    தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்களை தடுக்க ரோந்து படகு கேட்டு கோரிக்கை வந்துள்ளது. விரைவில் கடலோர காவல் படையினருக்கு ரோந்து படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    'ஓ.பன்னீர்செல்வம் காலாவதியானவர்'

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம், தி.மு.க.வின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் காலாவதியானவர் என்று கூறி சென்றார்.

    • தெய்வக்கனி மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தெய்வக்கனியை சேர்த்தனர்.

    நெல்லை:

    பாளை தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு தெய்வக்கனி (வயது 50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று தெய்வக்கனி வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள் ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த தெய்வக் கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு அந்த மாணவி சென்றுள்ளார்.
    • மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி நெல்லையில் உள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • படுகாயம் அடைந்த சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுடலைமணி (வயது 29). இவருக்கு கடந்த 2 வருடங்க ளுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இவர் இன்று அதிகாலை மானூர் அருகே உள்ள குத்தாலப்பேரி விலக்கு நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுடலைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலைமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர். 

    • ஈனமுத்துக்கும், சுடலைக்கும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • ஈனமுத்துவை அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து(வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுடலை(28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஈனமுத்துவை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி பார்வதி, சுடலை, அவரது மனைவி சுப்புலெட்சுமி, பானு ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் சுடலை தன்னை ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • தனியார் நிதி நிறுவனத்தில் அருண்குமார் ஊழியராக உள்ளார்.
    • அருண்குமார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    களக்காடு:

    கல்லிடைகுறிச்சி குமாரகோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 21). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். நேற்று இவரும், அதே ஊரை சேர்ந்த சக்திவேலும் (23) மோட்டார் சைக்கிளில் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பத்மநேரி அருகே உள்ள பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் ரோட்டில் சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருண்குமாரும், சக்திவேலும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அருண்குமார் நெல்லை அரசு மருத்துவமனையிலும், சக்திவேல் தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்ட னர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • குடிநீர் வசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நொச்சிகுளம் ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்தில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட நாகசுதர்சனா நகர், வெங்கடாச்சலபதி நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய 3 நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வற்காக குடிநீர் திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே குடிநீர் வசதி பற்றாக்குறை இருந்தது.

    ஆகவே அதனை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், அருண்தவசு, மகேஷ்குமார், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, சத்தியவாணிமுத்து, தனிதங்கம், நொச்சிகுளம் ஊராட்சிமன்ற தலைவர் வேலம்மாள் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×