பாளையில் தோட்டத்திற்கு சென்ற பெண் பாம்பு கடித்து சாவு

தெய்வக்கனி மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தெய்வக்கனியை சேர்த்தனர்.
பாளையில் தோட்டத்திற்கு சென்ற பெண் பாம்பு கடித்து சாவு
Published on

நெல்லை:

பாளை தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு தெய்வக்கனி (வயது 50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

நேற்று தெய்வக்கனி வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள் ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த தெய்வக் கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com