என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த தையொட்டி நெல்லை மாநகர் தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மாலைராஜா தலை மை தாங்கினார். முன்னாள் மண்டல சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா, ராவணன், உடன்குடி தன பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி வக்கீல் அலிப் மீரான், நிர்வாகிகள் அப்துல் கையூம், பூக்கடை அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் கோபி, அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டி, இளைஞரணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை, மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தன்குழி, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி ஆகிய 7 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 32,970 பேர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மீன்பிடி தடைகாலம் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜீன் 14-ந்தேதி வரை கிழக்கு பகுதியில் மீன் பிடிக்க தடைக்காலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் தலா ரூ.5000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர்களது கோரி க்கைகளை உடனடி யாக நிறைவேற்று வதற்கு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி.
    • இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை தாலுகா கான்சாபுரம் தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் நாடார் மகன் சுரேஷ் (வயது 21). பனை ஏறும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் நுங்கு வெட்ட பனை ஏறும்போது மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

    பின்னர் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது வருமானமின்றி வீட்டில் கஷ்டப்படுவதாகவும், எனவே சங்கத்தில் இருந்து உதவி கேட்டும் மனு கொடுத்திருந்தார்.

    அவரது மனுவை நிர்வாக சபை கூட்டத்தில் பரிசீலித்த நிர்வாகிகள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அவருக்கு நலிந்தோர் நலநிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் வழங்க முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைமை அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமையில், செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் சுரேசின் தந்தை பெருமாள் நாடாரிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் நிர்வாக சபை உறுப்பினர் ஏ.நயினார் நாடார் கலந்துகொண்டார்.

    • மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28).
    • அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் 2 பேரிடமும் தகராறு செய்தார்.

    நெல்லை:

    மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் அவர்களிடம் தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அவர்களை அவதூறாக பேசி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார்.

    • கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இதில் தூய்மை காவலர்களோடு பொதுமக்கள் இணைந்து குப்பைகளை அகற்றினர்.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் பஞ்சாயத்து சார்பில் கே.டி.சி. நகரில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவி முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தூய்மை காவலர்களோடு பொதுமக்கள் இணைந்து குப்பைகளை அகற்றினர். மேலும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) பொன்ராஜ், பாளை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணமணியன், யூனியன் பொறியாளர் பிரவீன், மேற்பார்வையாளர் முருகன், மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுதா, பணித்தள பொறுப்பாளர் சோபனா, திட்ட மேற்பார்வையாளர் மாரியம்மாள், வார்டு உறுப்பினர்கள் ஸ்ரீலதா, பரமசிவன் சுரேஷ், பாரதி, ஊராட்சி செயலர் சுபாஷ், அரசு ஒப்பந்ததாரர்கள் மணிகண்டன், பால்துரை, வடக்கூர் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    • சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
    • போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

    நெல்லை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பஸ்சில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது.

    அதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.

    பஸ் புறப்பட்டு சென்ற போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை அவதூறாக பேசி பறை இசை கருவிக்கு பஸ்சில் இடமில்லை எனக்கூறி வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக நெல்லை போக்குவரத்து கழக மேலாளர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நெல்லை போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நடத்துனர் கணபதி 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது.
    • வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் நேற்று நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் இன்று நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    • பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார்.
    • ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது40). இவர் கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவில் இவர் களக்காடு அருகே உள்ள வடமலை சமுத்திரத்திற்கு வாழைத்தார்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்குள்ள பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். இரவில் மோட்டார் சைக்கிளை இயக்கும் சத்தம் கேட்டு, அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (19), காருக்குறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் வேல்சாமி (18), சேரன்மகாதேவியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர். அப்போது நந்து உள்பட 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக நந்து உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில வாரங்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது.
    • கொடுமுடியாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில வாரங்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    நெல்லை புறநகர் பகுதிகளான சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக களக்காட்டில் 38.60 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 21 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று மதியம் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் கூடின. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.நெல்லையில் 23 மில்லிமீட்டர் பதிவானது. பாளையில் 7 மில்லிமீட்டர் பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவனந்தபுரம் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. வெயிலின் தாக்கம் அதிகப்படியாக இருந்த நிலையில்திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று மாலையில் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 28). இவர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் குமரிக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர்.

    காரை பிரவீன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை கார் நெல்லை கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது பிரவீன் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த அவரது உறவினர்களான கலந்தபனையை சேர்ந்த செல்வி(36), பிரதீபா(36), டேவிட், சிறுமி ஆதரா ஸ்ரீ (7), காரை ஓட்டி வந்த பிரவீன், அவரது மனைவி சர்மின் விஜின்(27) ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினாலும், மழை பொழிவு அதிகரிப்பதன் காரணமாகவும் இன்று ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.

    அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100-க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலையில் விற்பனையானது.

    • பா.ஜனதா சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மழையிலும் பா.ஜ.க. வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் குளப்பிறை தெருவில் பா.ஜனதா சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    டவுனில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்த முதியவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சந்திப்பு ஈரடுக்கு மேப்பால பராமரிப்பு பணியின் போது கல் விழுந்து காயமடைந்த வர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கி னார்.

    பொதுச்செய லாளர்கள் வேல் ஆறுமுகம், டிவி சுரேஷ், முத்து பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத் தலைவர் முருகதாஸ், செயலாளர்கள் நாகராஜன், மாரியம்மாள், முத்தையா, மண்டல் தலைவர் இசக்கி அய்யப் பன், துணைத் தலைவர் மாரியப்பன், பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் தின் போது திடீர் மழை பெய்தது. அந்த மழையிலும் பா.ஜ.க. வினர் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×