search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இன்று பூக்களின் விலை கடும் உயர்வு; பிச்சிப்பூ  கிலோ ரூ.1,500-க்கு  விற்பனை
    X

    நெல்லையில் இன்று பூக்களின் விலை கடும் உயர்வு; பிச்சிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

    • நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினாலும், மழை பொழிவு அதிகரிப்பதன் காரணமாகவும் இன்று ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.

    அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100-க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலையில் விற்பனையானது.

    Next Story
    ×