என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது
    X

    நெல்லையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில வாரங்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது.
    • கொடுமுடியாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில வாரங்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் நேற்று மாலை நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.

    நெல்லை புறநகர் பகுதிகளான சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. அதிக பட்சமாக களக்காட்டில் 38.60 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 21 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று மதியம் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் கூடின. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.நெல்லையில் 23 மில்லிமீட்டர் பதிவானது. பாளையில் 7 மில்லிமீட்டர் பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவனந்தபுரம் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. வெயிலின் தாக்கம் அதிகப்படியாக இருந்த நிலையில்திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று மாலையில் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×