என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த விவசாயிகள் பெரியகுளத்தை சீரமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
- தனியார் நிறுவனம் பொதுவெளியில் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நாம் தமிழர் கட்சி நெல்லை தொகுதி துணைத்தலைவர் மாரி முத்து தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
வேலையில் முன்னுரிமை
கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் பொதுவெளியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவு களை கொட்டி வருகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
கங்கைகொண்டான் ஊராட்சி பகுதியில் நடை பெற்று வரும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளில் கங்கைகொண்டான் உட்பட்ட பகுதிகளை சேர்ந்த படித்த, படிக்காத ஆண், பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
கைது
தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கிராமமக்கள் நலன் காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகேசன் தலைமையில் கொடுத்த மனுவில், ராதாபுரம், வள்ளியூர் யூனியன் பகுதியில் சரிவர மழை பெய்யவில்லை.
நாங்கள் ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் மின் இணைப்புகளை அடிக்கடி துண்டித்து விடுகிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை. எனவே மின்தடையை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.






