என் மலர்
திருநெல்வேலி
- நிர்வாகிகள் கூட்டம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்டம் சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூர் தி.மு.க.வின் பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன் வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், சங்கர்நகர் பேரூர் செயலாளர் செல்வ பாபு, நாரணம்மாள்புரம் பேரூர் பேச்சிக்குட்டி, அவைத்தலைவர்கள் ராஜாமணி, மகாவிங்கம், பெரியதுரை, நாரணம்மாள் பேரூர் வார்டு செய லாளர்கள் முருகன், முருகன், பால்மாயாண்டி, அசோக், முருகன், சேர்ம செல்வம், இசக்கிபாண்டி, சுடலை, உய்க்காட்டான், முருகன், பன்னீர், நடராஜன், நாசர், காமாட்சி, செல்வம், சங்கர் நகர் வார்டு செயலா ளர்கள் பாண்டி, மாரி யம்மாள், பால சுப்பிரமணி, ஜெய்லா னி, தங்கம், பெருமாள்சாமி, முருகன், மணி, மாணவரணி மீரான், குரு நாதன், காதர் ஒலி, பிரபா, அருள்மணி உள்ளிட்ட ஏராளமானவ ர்கள் கலந்து கொண்டனர்.
- டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார்.
- டேவிட் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார்.
நெல்லை:
ஆலங்குளத்தை சேர்ந்தவர் டேவிட்(வயது 36). இவர் நேற்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலமாக இயக்கப்படும் சிவப்பு நிற பஸ்சில் சந்திப்பு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய டேவிட்டிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். உடனே அவர் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார். ஆனால் பையில் டிக்கெட்டை காணவில்லை.
உடனே பரிசோதகர் அபராதம் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் டேவிட், தான் டிக்கெட் எடுத்ததாகவும் சில நிமிடங்கள் பொறுங்கள். எனது பையில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த பரிசோதகர் ரூ.200 அபராதமாக விதித்து ள்ளார். அபராத சீட்டு எழுதி முடித்ததும், டேவிட் தேடிய டிக்கெட் அவரது கைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
உடனே அவர் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்டி உள்ளார். ஆனால் அபராதம் விதித்தபின் மாற்ற முடியாது என்று அலட்சியமாக கூறிவிட்டு பரிசோதகர் சென்றுவிட்டார் எனவும், பரிசோதகரின் பொறுமையின்மையால் ரூ.15 டிக்கெட்டுக்கு ரூ.200 அபராதமாக செலுத்தி உள்ளேன் எனவும் டேவிட் வருத்தத்துடன் தெரிவித்தார்.
- கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
- ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
இங்கு மூலைக்கரைப் பட்டி சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த 450 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
முற்றுகை
கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப் பட்டது. மாணவ-மாணவி கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி கள் இல்லை. கழிவறை களும் கட்டப்படவில்லை. ஏற்கனவே இருந்த கழிவறையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
புதிய கழிப்பறை கட்டும் பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல பாது காக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யவில்லை.
இதையடுத்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
- ரெட்டியார்பட்டி நாராயணன், மாணவனுக்கு ஊக்கத் தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
- தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ரெட்டியார்பட்டி நாராயணன் பொன்னாடை அணிவித்தார்.
நெல்லை:
கடந்த மாதம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நெல்லை மாவட்ட அளவில் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ம.தி.தா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவன் அர்ஜூன் பிரபாகருக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமை தாங்கினார். நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு ஊக்கத் தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
விழாவில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்வு முடிவு பெற்ற மைக்காக கடம்பன்குளம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியை பாராட்டி தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ரெட்டியார்பட்டி நாராயணன் பொன்னாடை அணிவித்தார்.
முனைஞ்சிபட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் குழந்தை தெரஸ் உட்பட அனைத்து ஆசிரி யர்களுக்கும் ரெட்டி யார்பட்டி நாராயணன் பொ ன்னாடை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் செல்வராஜ் மற்றும் முத்தூர் நயினார், தருவை செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
- களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.
- தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (வயது 48). விவசாயி.
இவர் களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளை நிலங்களை குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ திடீர் என மலையடிவாரத்தை தாண்டி, பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் காட்டுத் தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
- பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோர்ட்டு வழக்குகள் காரணமாக பஸ் நிலையம் திறப்பது தள்ளிப்போகிறது.
இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் அதனை தற்காலிகமாக திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளை அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று பஸ் நிலையத்தை சுற்றி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து பாளை, புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும்.
- வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில்,
நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- பழையபேட்டை, காந்திநகர் பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
- 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் சில இடங்களில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட பழையபேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. பழையபேட்டை அரசு பள்ளி அருகே நேற்று பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது குடிநீர் குழாயை உடைத்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. சாலையில் வீணாகி செல்லும் தண்ணீரை பிடித்து சிலர் அங்கேயே குளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது. 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றால் இப்பகுதி வழியாக தண்ணீர் செல்வதை நிறுத்த வேண்டும். அப்படி செய்தால் பல கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும். இதனால் அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்யாமல் உள்ளனர்.
இந்த தண்ணீர் பாதாளச் சாக்கடைக்கு தோண்டப் பட்ட பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. மேலும் இன்று வரை 2 நாட்களாக ஆறுபோல் தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சகதிக் காடாக காட்சி யளிக்கிறது. எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்த தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தருவை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.
- போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மகன் சக்திவேல்(வயது 23). கூலி தொழிலாளி.
நேற்று நள்ளிரவு இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அம்பை சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டிச்சென்றார். தருவையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது அப்பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சக்திவேல் பரிதாபமாக இறந்தார். கதிர்வேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது ஊழியர்களுக்கு தெரியவந்தது.
- அடையாளம் தெரியாத நபர் பணத்தை திருடிச் செல்வதும் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த பங்கில் வசூலான பணத்தை ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வருவதும், பின்னர் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் ஆறுமுகம் (வயது53) என்பவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- போட்டியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
வள்ளியூர் :
குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சிறப்பு கோடைக்கால இறகுப்பந்து போட்டி கடந்த 3 நாட்களாக வள்ளியூர் எஸ்.டி.என். பேட்மிட்டன் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகளில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் எஸ்.டி.என். பயிற்சி அரங்க உரிமையாளர் எட்வின் பிரைட், நிஷா எட்வின் மற்றும் வள்ளியூர் வணிகர் நல சங்க தலைவரும், நிலா பேக்கரி உரிமையாளருமான தா.எட்வின் ஜோஸ், வணிகர் நல சங்க செயலாளர் முல்லை கவின் வேந்தன், மருத்துவர் சங்கர வெங்கடேசன், எஸ்.என். ஜுவல்லரி உரிமையாளர் மணிவண்ணன், டி.ஜே.ஆர். கட்டுமான நிறுவனத் தலைவர் தேவேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள் புஷ்பராஜ், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி தருணுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் பிரியா கவின் வேந்தன் செய்திருந்தார்.
- மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன
- ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊருக்குள் புகுந்த கரடி
நாங்குநேரியில், மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் இங்குள்ள விளை நிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த இந்த கரடி, திசை மாறியதால், ஊருக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது.
ஊருக்குள் புகுந்த கரடி, விவசாயிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சமடைந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விட்டு உடனடியாக வெளியேறினார்கள். இதற்கிடையில் மறுகால்குறிச்சி சாலையில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்ய வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், இந்த கரடியை நேரில் பார்த்தார்.
எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
இதற்கிடையே ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த கரடியை உயிருடன் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளார்கள். கூண்டுக்குள், கரடிக்கு பிடித்த பழவகைகளை வைத்திருக்கிறார்கள்.
நேற்று 2-வது நாளாகியும், அந்த கூண்டுக்குள் கரடி சிக்கவில்லை. ஊருக்குள் புகுந்துள்ள அந்த கரடியால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டு இருப்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்தக் கரடியை உயிருடன் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கரடி நடமாட்டம் உள்ள மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால், மாணவிகளின் நலன்கருதி, கரடியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறை யினர் வேகப்படுத்த வேண்டும். எனவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.






