search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரியார்- கருணாநிதிக்கு சிலை-மேயரிடம், திராவிடர் கழகத்தினர் மனு
    X

    கூட்டத்தில் மேயர் சரவணனிடம் திராவிடர் கழகத்தினர் மனு அளித்த காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ.

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரியார்- கருணாநிதிக்கு சிலை-மேயரிடம், திராவிடர் கழகத்தினர் மனு

    • தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும்.
    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில்,

    நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×