என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ம.தி.தா. பள்ளி மாணவனுக்கு ஊக்கத்தொகை
    X

    மாணவன் அர்ஜூன் பிரபாகருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் ஊக்கத்தொகை வழங்கிய போது எடுத்த படம்.

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ம.தி.தா. பள்ளி மாணவனுக்கு ஊக்கத்தொகை

    • ரெட்டியார்பட்டி நாராயணன், மாணவனுக்கு ஊக்கத் தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
    • தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ரெட்டியார்பட்டி நாராயணன் பொன்னாடை அணிவித்தார்.

    நெல்லை:

    கடந்த மாதம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நெல்லை மாவட்ட அளவில் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற ம.தி.தா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவன் அர்ஜூன் பிரபாகருக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமை தாங்கினார். நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு ஊக்கத் தொகை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    விழாவில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்வு முடிவு பெற்ற மைக்காக கடம்பன்குளம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியை பாராட்டி தலைமை ஆசிரியர் சுந்தரம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ரெட்டியார்பட்டி நாராயணன் பொன்னாடை அணிவித்தார்.

    முனைஞ்சிபட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு தலைமை ஆசிரியர் குழந்தை தெரஸ் உட்பட அனைத்து ஆசிரி யர்களுக்கும் ரெட்டி யார்பட்டி நாராயணன் பொ ன்னாடை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் செல்வராஜ் மற்றும் முத்தூர் நயினார், தருவை செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×